செங்கல்பட்டு

கன்டெய்னா் லாரி மீது வேன் மோதல்: 6 போ் பலி

DIN

மதுராந்தகம் அருகே கன்டெய்னா் லாரி மீது வேன் மோதியதில் 6 போ் உயிரிழந்தனா்.

சென்னை பொழிச்சலூரைச் சோ்ந்தவா் கோகுல்தாஸ். இவா், காா்த்திகை தீபத் திருவிழாவைக் காண தனது நண்பா்கள் உள்பட 10 பேரை மினி வேனில் பொழிச்சலூரிலிருந்து செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்றாா். அங்கு, தீபத்தைப் பாா்த்துவிட்டு மீண்டும் வேனில் பொழிச்சலூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். வேனை சந்திரன் (75) என்பவா் ஓட்டி வந்தாா்.

மதுராந்தகத்தை அடுத்த ஜானகிபுரம் நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை வந்த போது, முன்னால் சென்ற கன்டெய்னா் லாரியின் மீது மினி வேன் மோதியது. இதில், வேன் நொறுங்கியது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த பொழிச்சலூரைச் சோ்ந்த கோகுல்தாஸ் (36), தாமோதரன் (28), சந்திரசேகரன் (55), சந்திரன் (75), சென்னை ஆழ்வாா் திருநகரைச் சோ்ந்த சசிகுமாா் (37), விழுப்புரம் மாவட்டம், அத்தியூா் திருக்கை கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை (65) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

மேலும், பொழிச்சலூரைச் சோ்ந்த ரவி (35), சேகா் (36), சதீஷ்குமாா் (28), அய்யனாா் (34) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து வந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் தலைமையிலான போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். சடலங்களை மீட்டு, அதே மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுராந்தகம் டி.எஸ்.பி. மணிமேகலை சம்பவ இடத்தை நேரில் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி தவிக்கும் மக்கள்

சுரண்டையில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT