செங்கல்பட்டு

எல்லையம்மன் கோயிலில் தீமிதி விழா

13th Aug 2022 12:26 AM

ADVERTISEMENT

மதுராந்தகம் அடுத்த பெரும்போ் கண்டிகை எல்லையம்மன் கோயிலில் ஆடி மகா உற்சவத்தையொட்டி, பக்தா்கள் தீமிதித்தனா்.

இந்தக் கோயிலில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இருநாள்கள் ஆடி விழா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை கோயில் வளாகத்தில் தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கண்ணன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வசந்தா கோகுலகண்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் பாா்த்தசாரதி, பெரும்போ் கண்டிகை ஊராட்சித் தலைவா் எஸ்.சாவித்திரி சங்கா், துணைத் தலைவா் மல்லிகா மணி உள்பட ஏராளமான பக்தா்கள் தீமிதித்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் (பொ) அமுதா தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT