செங்கல்பட்டு

செங்கல்பட்டு அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை முயற்சி

DIN

செங்கல்பட்டு அடுத்த ஊரப்பாக்கத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயம் காரணமாக தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் அய்யஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் சேத்துப்பட்டு எம்.சி.சி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் இவரது மகள் அனுசியா பிளஸ் 2 முடித்துள்ளார். இவரது மனைவி ஷிபா இவரும் மாடம்பக்கத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். 

இந்த நிலையில் அனுசியா கடந்த 12 ஆம் தேதி ஆவடி நீட் தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதியுள்ளார். முதன் முறையாக நீட் தேர்வு எழுதிய தோல்வி பயம் காரணமாக, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீக்காயங்களுடன் போராடிய மாணவியை மீட்டு தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 40 சதவிகித தீக்காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

மாணவியை ஊரக தொழில்துறை அமைச்சர் தா..மோ அன்பரசன் நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு ஆறுதல் கூறினார். இதனால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரபரப்பாக காணப்படுகிறது. தற்கொலை முயற்சி செய்து கொண்ட மாணவிக்கு, தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று வரும் மாணவியை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அதேபோல் விடுதலை சிறுத்தை கட்சியின் பிரமுகர் தென்னவன் மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், தொலைபேசி வாயிலாக மாணவியின் தந்தையிடம் ஆறுதல் கூறினார். மேலும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அம்மாணவி சந்தித்து நலம் விசாரித்தது மட்டும் இல்லாமல், மாணவியின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

இது தொடர்பாக கல்லூரி முதல்வரிடம் விசாரித்த மாவட்ட ஆட்சியார் ராகுல் நாத், தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT