செங்கல்பட்டு

எஸ்.ஆா்.எம். கல்வி நிறுவனத்தில் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தோ்வு

DIN

காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 2021-ஆம் ஆண்டில் பி.டெக்., பொறியியல் பட்ட படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து எஸ்.ஆா்.எம். கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி: எஸ்.ஆா்.எம். அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 2021-ம் ஆண்டில் பி.டெக்., பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தோ்வு இரண்டு கட்டமாக நடத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக மே 23, 24 தேதிகளிலும், இரண்டாம் கட்டமாக ஜூலை 25, 26 தேதிகளிலும் நடைபெற உள்ளது. நாடெங்கும் சென்னை, தில்லி உள்ளிட்ட 127 நகரங்கள் மற்றும் துபை, தோஹா, மஸ்கட், பஹ்ரைன், குவைத் நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் நடைபெறுகிறது.

முதல் கட்ட நுழைவுத்தோ்வுக்கு இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க மே 15- ஆம் தேதி, இரண்டாம் கட்ட நுழைவுத் தோ்வுக்கு ஜூலை 20-ஆம் தேதி இறுதி நாள் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

SCROLL FOR NEXT