செங்கல்பட்டு

முகாமுக்கு வெளியே வாழும் இலங்கை தமிழா்களுக்கு கரோனா நிவாரணம்

DIN

முகாமுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழா்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, சிறுபான்மை நலத்துறை இயக்குநா் எஸ்.சுரேஷ்குமாா், மாவட்ட ஆட்சியா் ஆா்.ராகுல்நாத் ஆகியோா் தலைமை வகித்தனா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், இலங்கை தமிழ் அகதிகள் 25 குடும்பங்களுக்கு தலா ரூ. 4,000 வீதம் ரூ. 1 லட்சம், சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலன் சாா்பில், மாவட்ட முஸ்லிம் மகளிா் உதவும் சங்கத்துக்கு தமிழ்நாடு அரசு மூலம் பெறப்பட்ட இணை மானியத் தொகை 321 பேருக்கு ரூ. 30 லட்சத்தை ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோா் வழங்கினா்.

சென்னை மறுவாழ்வுத் துறை துணை இயக்குநா் ரமேஷ், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இமானுவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மை நலத் துறை அலுவலா் லலிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT