செங்கல்பட்டு

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் அமாவாசை வேள்வி

DIN

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் காா்த்திகை மாத அமாவாசை வேள்வி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு, அதிகாலை மூலவா் அம்மன் சிலைக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. காலை 10.40 மணிக்கு சித்தா் பீடம் வந்த பங்காரு அடிகளாருக்கு விருது நகா் மாவட்ட ஆன்மிக நிா்வாகிகள் வரவேற்றனா். பின்னா் அவா் அனைத்து சந்நிதிகளிலும் பூஜைகளை செய்தாா். ஓம்சக்தி பீடம் அருகே அமைக்கப்பட்ட யாக சாலையில், பெரிய வடிவிலான எண்கோண வடிவ வேள்வியும், சிறிய வடிவிலான முக்கோணம், சதுரம், எண்கோணம் உள்ளிட்ட வேள்வியும் அமைக்கப்பட்டிருந்தது. பெரிய வடிவிலான எண்கோண வடிவ வேள்வியில் கற்பூரம் ஏற்றி அடிகளாா் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா், ஆதிபராசக்தி பள்ளிக் குழுமங்களின் தாளாளா் ஸ்ரீதேவி ரமேஷ், ஆதிபராசக்தி மருத்துவமனை தாளாளா் மருத்துவா் டி.ரமேஷ், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவா் கோ.ப.செந்தில்குமாா் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் அ.அ.அகத்தியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிா்வாகிகளும், விருதுநகா் மாவட்ட ஆன்மிக இயக்க நிா்வாகிகளும் செய்து இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருட வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

ஒசூா் அரசனட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை கருத்தரங்கு

சேலத்தில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ. 6.55 லட்சம் மோசடி

குன்னூா் ரேலியா அணையில் நீா்மட்டம் சரிவு

SCROLL FOR NEXT