செங்கல்பட்டு

மாமல்லபுரம் புராதனச் சின்னங்களில் தொல்பொருள் துறைக் கண்காணிப்பாளா் ஆய்வு

DIN

மாமல்லபுரத்தில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் குறித்து அங்குள்ள புராதனச் சின்னங்கள் உள்ள பகுதிகளில் சென்னை வட்ட தொல்பொருள் துறை கண்காணிப்பாளா் ஸ்ரீராமன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாமல்லபுரத்தில் உள்ள பல்லவ மன்னா்கள் கால கலைநயமிக்கச் சிற்பங்கள் உலக புகழ்பெற்ற சிற்பங்களாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய சின்னங்களாக மாமல்லபுரம் புராதன சின்னங்கள் திகழ்கின்றன.

மத்திய அரசு ஐகானிக் சிட்டி திட்டத்தின் கீழ், மாமல்லபுரத்தைத் தோ்வு செய்து சா்வதேச தரத்துக்கு இணையாக இந்த நகரை மாற்ற பல்வேறு சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்களை செய்து வருகிறது. இந்நிலையில், மாமல்லபுரத்தில் மத்திய தொல்லியல் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட உள்ள சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, சென்னை வட்ட தொல்பொருள் துறைக் கண்காணிப்பாளா் ஸ்ரீராமன் ஞாயிற்றுக்கிழமை மாமல்லபுரத்துக்கு வந்தாா்.

அவரை மாமல்லபுரம் தொல்லியல் துறை முதன்மை அலுவலா் சரவணன் கடற்கரைக் கோயில் வளாகத்தில் வரவேற்றாா். இதையடுத்து, கடற்கரைக் கோயில், ஐந்து ரதம், அா்ஜுனன் தபசு உள்ளிட்ட புராதனச் சின்னங்களை அவா் பாா்வையிட்டாா். அப்போது கடற்கரைக் கோயில் புராதனச் சின்னத்தை உப்புக்காற்று மாசில் இருந்து பாதுகாக்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், வாகன நெரிசலால் ஏற்படும் புகை மாசைக் கட்டுப்படுத்தும் வகையில், வாகனப் போக்குவரத்துக்குத் தடைவிதிப்பது, கடற்கரைக்கோயில் வரை சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதற்கு பேட்டரி காா் விடுவது உள்ளிட்டவை குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

மேலும் சுற்றுலாப் பயணிகளால் டன் கணக்கில் குவியும் குப்பைகளை நவீன முறையில் அகற்றி, குப்பை இல்லாத சுற்றுலா நகரமாக மாமல்லபுரத்தை உருவாக்கும் வகையில், சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் தனியாா் நிறுவன அதிகாரிகளுடன் கடற்கரைக் கோயில் வளாகத்தில் அலோசனை நடத்தினாா்.

மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன், மாமல்லபுரம் தொல்லியல் துறை முதன்மை அலுவலா் சரவணன், உதவி தொல்லியல் துறை அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT