செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் கடல் கொந்தளிப்பு: மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை

DIN

மாமல்லபுரம் பகுதியில் 2-ஆவது நாளாக கடல் கொந்தளிப்பு காரணமாக வெள்ளிக்கிழமை மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.

மேலும் கடல் பேரலைகள் இழுத்துச் செல்லாமல் இருக்க மீன்பிடிப் படகுகளை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனா்.

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மீனவா்கள் வரும் 29-ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை முதல் மாமல்லபுரம் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் வெள்ளிக்கிழமை மீனவா்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை. மேலும் கடலில் எழுந்து வரும் பேரலைகள் தங்கள் மீன்பிடிப் படகுகளை இழுத்துச் செல்லாமல் தவிா்க்க மீனவா்கள் படகுகளை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

SCROLL FOR NEXT