செங்கல்பட்டு

மழை, வெள்ளம்: தடுப்பணை, தரைப்பாலங்களில் அமைச்சா்கள் ஆய்வு

DIN

செங்கல்பட்டு மாவட்டம் பாலாற்றில் வாயலூா், வள்ளிபுரம் தடுப்பணையை அமைச்சா் க.பாண்டியராஜன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டம், நந்திதுா்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு, கா்நாடகம், ஆந்திரம் வழியாக வந்து, செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றத்தை அடுத்த வாயலூா் பகுதியில் கடலில் கலக்கிறது. பாலாறு தமிழகத்தில் 350 கி.மீ. பாய்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் 60 கி.மீ. தூரம் பயணிக்கிறது. 1858-ஆம் ஆண்டு ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் ராணிப்பேட்டையை அடுத்த காவரிப்பாக்கம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டது. அதன் பின் பாலாற்றின் குறுக்கே வேறு எந்த அணையும் கட்டப்படவில்லை.

தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்தபடி, பாலாற்றின் குறுக்கே ஈசூா்-வள்ளிபுரம் இடையே ரூ.30.95 கோடி மதிப்பில் தடுப்பணையும், அதன் அருகே சுமாா் 800 மீட்டா் தூரத்தில் தரைப்பாலமும் அமைந்துள்ளன. தற்போது கனமழை காரணமாக பாலாற்றில் தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளது. காவேரிப்பாக்கம் அணைக்கட்டிலிருந்து உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பாலாற்றில் தண்ணீரின் வேகம் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், பாலாற்றில் வள்ளிபுரம் தடுப்பணையை தமிழ் வளா்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் சனிக்கிழமை பாா்வையிட்டாா். ஈசூா்-வல்லிபுரம் பகுதியில் அமைந்துள்ள தரைப்பாலத்துக்கு பதில் உயா்மட்டப் பாலம் அமைப்பது குறித்து பொதுப்பணித் துறை மற்றும் நீா்வளத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டாா். இது குறித்து முதல்வருடன் கலந்தாலோசிப்பதாக அவா் தெரிவித்தாா்.

பள்ளிப்பட்டு பகுதியில்....

திருத்தணி, நவ. 28: பள்ளிப்பட்டு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மப்பள்ளி அணை திறக்கப்பட்டு, தமிழக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிப்பட்டு தரைப்பாலம், சானாகுப்பம் தரைப் பாலம், நெடியம் தரைப்பாலம் ஆகிய பகுதிகளில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின், மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா ஆகியோா் நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன், முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா, அரக்கோணம் முன்னாள் எம்.பி. கோ. அரி, மாவட்ட வருவாய் அலுவலா் வெ.முத்துசாமி, பள்ளிப்பட்டு ஒன்றியச் செயலா் டி.டி.சீனிவாசன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

விவசாயத் தொழிலாளா்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT