செங்கல்பட்டு

திருவடிசூலத்தில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

29th Nov 2020 07:36 PM

ADVERTISEMENT

திருவடிசூலம் தேவி கருமாரியம்மன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா சொக்கப்பனை கொளுத்தப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
 செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் கோயில் புறத்தில் ஒரே கருஙகல்லிலால் 51 அடி உயரத்தில் எழுந்தருளி இருக்கும் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா தீபத்தை போன்று மகிழ்ச்சி அளிக்க சொக்கப்பனை கொளுத்தப்பட்டு தீபத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
 கோயில் ஸ்தாபகர் மதுரை முத்து சுவாமிகள் திருக்கரங்களால் அகண்ட தீபமும் உலகம் பிரகாசமாக இருக்க வேண்டியும், நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவும் மகிழ்ச்சியை கொடுக்கும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு கோலாகலமாக விழா நடைபெற்றது. 
பக்தர்கள் இதனை அடுத்து கோயில் முழுவதும் அகல் தீபம் ஏற்றி குடும்பம் சுபிட்சமாக நலமாகவும் இருக்க தீபமேற்றி வழிபட்டனர். மனதில் உள்ள இருளைப் போக்கி ஒளி தீபம் ஆக சுடர்விட்டுப் பிரகாசிக்க அம்மன் அருள் வேண்டியும் பிரார்த்தனை செய்து கொண்ட குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் விலகும் சகல சௌபாக்கியமும் வேண்டிய தீபமேற்றி வழிபட்டனர். 
இதனால் கோயில் முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டு பிரகாசமாக  காட்சியளிக்கிறது. கார்த்திகை தீப பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகர் மதுரை முத்து சுவாமிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Chengalpattu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT