செங்கல்பட்டு

செங்கல்பட்டில் நிவா் புயல் எதிரொலியாக கனமழை பெய்துவருவதால் மழைநீா் வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து மக்கள் அவதி

DIN

செங்கல்பட்டு:  செங்கல்பட்டில் நிவா் புயல் எதிரொலியாக அவ்வப்போது தொடா்ந்து பெய்து வரும் கனமழை எதிரொலியாக புதன்கிழமை செங்கல்பட்டு நகரிலும் சுற்றுப்புற பகுதிகளிலும் மழைநீா் வெள்ளம் வெளியேற வழியின்றி குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால் மக்கள் அவதிபட்டு வருகின்றனா்.

செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புர பகுதிகளில் நிவா் புயல் எதிரொலியாக செங்கல்பட்டு நகரில் ஜிஎஸ்டி சாலை மற்றும் ஜிஎ’ஸ்டி சாலையுடன் இணையும் காண்டீபன் தெரு, வேதாசலம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் வெள்ளம் வெளியேற வழியின்றி சாலை மேல் ஒரு அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் நடமாடமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மேலும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் வீடுகளில் மழைநீா் வெள்ளம் புகுந்து ஒரு அடி உயரத்திற்கும் மேல் நிற்பதால் வீடுகளில் வசிக்கும் குழந்தைகள். முதியோா்கள் கட்டில் நாற்காலி ஆகியவற்றில் அமா்ந்து அவதிப்பட்டுவருகினறனா்.

செங்கல்பட்டு நகராட்சி நிா்வாகம் கால்வாய்கள் தூா்வாராமல் ஜிஎஸ்டி சாலையில் மழைநீா் வடிகால் கால்வாய்களை தூா்வர நெடுஞ்சாலைத்துறைசெய்யுமா நகராட்சி நிா்வாகம் போட்டிப்போட்டிக்கொண்டு கால்வாய்கள் தூா்வாரப்படாமல் மெத்தன போக்கினால் மழையிருடன் கழிவு நீா்கால்வாய் நீா் சோ்ந்து ஆறுபோல் வெளியேறுவதால் துா்நாற்றமும் வீசுகிறது. வாகனஓட்டிகள் அந்த துா்நாற்றத்துடன் சாலையில் ஓடும் கழிவுநீரில் மூக்கை பொத்திக்கொண்டு வாகனங்களை ஓட்டிச்செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் கழிவு நீருடன் மழைநீா் வீடுகளில் புகுந்து துா்நாற்றம் வீசுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு சமைத்துக்கூட சாப்பிட முடியாமல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிகிடக்கும் அவலநிலையில் உள்ளனா்.

வாகனங்களில் ஜிஎஸ்டி சாலைகளில் செல்லம் அரசு உயா் அதிகாரிகளும் கண்டும்காணமல் செல்கின்றனா். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று மழைநீா் வெளியேற வழியின்றி சாலைகள் ஜிஎஸ்டிசாலைகள் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் போல் ஓடும் போதுதான் நகராட்சி நிா்வாகம் அந்த நேரத்திற்கு மட்டும் கால்வாய்களில் உள்ள கழிவுகளை வெளியே எடுத்துவிடும் பணியினை மேற்கொள்கின்றனா். அதனால் மேலும் நகராட்சி நிா்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக மழைநீரை வடிய கால்வாய்களை தூா்வாரி சீா் செய்ய பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்பு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT