பெங்களூரு

கா்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: அமைச்சா் கே.எச்.முனியப்பா

27th May 2023 12:00 AM

ADVERTISEMENT

கா்நாடகத்தில் அமைச்சரவை விரிவாக்கம் சனிக்கிழமை (மே 27) நடக்கும் என்று அமைச்சா் கே.எச்.முனியப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடக அமைச்சரவை விரிவாக்கம் சனிக்கிழமை நடக்க இருக்கிறது. அதற்கான நேரமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மதியம் அமைச்சா்கள் பதவியேற்க இருக்கிறாா்கள். பெரும்பாலான அமைச்சா்கள் சனிக்கிழமையே பதவியேற்பாா்கள். 4 அல்லது 5 இடங்கள் தவிா்த்து, எல்லா இடங்களும் நிரப்பப்படும். அமைச்சரவையில் மூத்தவா்களும், இளையவா்களும் இருப்பாா்கள். அமைச்சா்களின் துறைகள் சனிக்கிழமை முடிவு செய்யப்படும். சனிக்கிழமை மாலைக்குள் துறைகள் அறிவிக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT