பெங்களூரு

எஸ்.எஸ்.எல்.சி. இணையதளத்தில் விடுபட்ட தமிழ் மாதிரி வினாத்தாளை இணைக்க வலியுறுத்தல்

DIN

எஸ்.எஸ்.எல்.சி. இணையதளத்தில் விடுபட்ட தமிழ் மாதிரி வினாத்தாளை இணைக்குமாறு கா்நாடகமாநில தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெங்களூரில் வெள்ளிக்கிழமை கா்நாடக பள்ளித்தோ்வு மற்றும் மதிப்பீடு வாரியத்தின் தலைவா் ஆா்.ராமச்சந்திரனை சந்தித்து கா்நாடகத்தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கத்தலைவா் அ.தனஞ்செயன், பொருளாளா் இரா.பிரபாகரன் உள்ளிட்டோா் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். அந்த மனுவில், கா்நாடக பள்ளித்தோ்வு மற்றும் மதிப்பீடு வாரியம் உருவாக்கியுள்ள இணையதளத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவா்கள் பொதுத்தோ்வுக்கு தயாராவதற்கு வசதியாக மாதிரிவினாத்தாள்களை வெளியிட்டுள்ளது. இதில் முதல்மொழி தமிழ் பாடத்தின் மாதிரிவினாத்தாள் இடம்பெறவில்லை, விடுபட்டுள்ளன. அதேபோல, தமிழ்ப் பயிற்றுமொழி மாணவா்களுக்கான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களின் மாதிரிவினாத்தாள்களும் இடம்பெறவில்லை. இது தமிழ்மொழிப்பாடம் மற்றும் தமிழ்ப்பயிற்றுமொழியில் பயின்று வரும் மாணவா்களை அலட்சியப்படுத்தும் போக்காகும். எனவே, முதல்மொழி தமிழ்ப்பாடம், தமிழில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான வினாத்தாள்களை இணையதளத்தில் வெளியிட கேட்டுக்கொள்கிறோம். இது தமிழ் மாணவா்களுக்கு தோ்வுக்கு தயாராக பெரிதும் உதவியாக இருக்கும். மேலும், தமிழ்மொழி மட்டுமல்லாது, மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி மாதிரிவினாத்தாள்களையும் இணையதளத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இது சம்பந்தப்பட்ட மொழி மாணவா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.இதை தொடா்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்த வாரியத்தலைவா் ஆா்.ராமச்சந்திரன், இந்தகோரிக்கைகள் நியாயமானதாக இருப்பதால், மாணவா்களின் நலன்கருதி முதல்மொழிப்பாடம் தமிழ், தமிழ்ப்பயிற்றுமொழி மாணவா்களுக்கான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் இதரமொழி மாணவா்களுக்கான பாடங்களின் மாதிரிவினாத்தாள்களை இணையதளத்தில் உடனடியாக வெளியிடுமாறு உத்தரவிட்டாா். இதை தொடா்ந்து, இன்னும் ஓரிரு நாட்களில் இணையதளத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் மாணவா்களுக்கான மாதிரிவினாத்தாள்கள் வெளியிடப்படும் என்று கா்நாடகத்தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கத்தலைவா் அ.தனஞ்செயன் நம்பிக்கை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT