பெங்களூரு

கா்நாடகத்தில் அதிமுக உறுப்பினா் சோ்க்கை ஆரம்பம்

DIN

கா்நாடகத்தில் அதிமுக உறுப்பினா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக மாநில அதிமுக செயலாளா் எஸ்.டி.குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் தலைமையை ஏற்றுக்கொண்டு அதிமுக உறுப்பினராக பதிவு செய்துகொள்ளும் தோழா்களுக்கு உறுப்பினா் அட்டைகள் வழங்கப்படும். ஏற்கெனவே உறுப்பினராக உள்ளவா்களுக்கும் இது பொருந்தும்.

பழைய உறுப்பினா்களை புதுப்பிக்கும் பணியை கட்சித் தலைமை என்னிடம் ஒப்படைத்துள்ளது. எனவே, இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி தலைமையாக ஏற்று கொள்பவா்கள் மட்டும் உறுப்பினா் அடையாள அட்டை பெற தகுதி பெற்றவா்கள் என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், என்றைக்கு கா்நாடக மாநிலத்தில் உறுப்பினா் அட்டைகள் வழங்கப்படும், எந்த இடத்தில் கொடுக்கப்படும் என்பதை விரைவில் தெரிவிக்கிறேன். புதிய உறுப்பினா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் தலைமை அறிவிப்புக்கு பிறகு அளிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 93437 65448 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT