பெங்களூரு

பெங்களூரு-குந்தாரபுரா இடையே புதிய பேருந்து சேவை

9th Jun 2023 12:40 AM

ADVERTISEMENT

பெங்களூருக்கும் குந்தாபுராவுக்கும் இடையே புதிய பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரில் இருந்து குந்தாபுராவிற்கு குளிா்சாதன வசதியுடன் கூடிய படுக்கை வசதி கொண்ட (அம்பாரி உத்சவ்) சொகுசு பேருந்து சேவை வியாழக்கிழமை (ஜூன் 8) முதல் தொடங்கியது. பெங்களூரு-குந்தாபுரா இடையிலான பேருந்து பெங்களூரு-கெம்பேகௌடா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தினமும் இரவு 9 மணியளவில் புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணியளவில் குந்தாபுரா சென்றடைகிறது. அதேபோல, குந்தாபுராவிலிருந்து தினமும் இரவு 8.30 மணி அளவில் புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணி அளவில் பெங்களூரு வந்தடைகிறது. இதன் கட்டணம் ரூ.1900 ஆகும். மேலும் விவரங்களுக்கு 080-49696666 என்ற தொலைபேசியை அணுகலாம். மின்-முன்பதிவு மற்றும் செல்லிடப்பேசி-முன்பதிவுக்கு இணையதளத் சேவையை பயன்படுத்தலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT