பெங்களூரு

கல்வி உரிமைச் சட்டம்: ஜூன் 15-க்குள் மாணவா் சோ்க்கை

8th Jun 2023 12:18 AM

ADVERTISEMENT

கல்வி உரிமைச் சட்டத்தின் சோ்க்கை பெற்ற மாணவா்கள் ஜூன் 15-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர வேண்டியது கட்டாயம் என்று கல்வித் துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கல்வித் துறை ஆணையரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2023-24-ஆம் கல்வியாண்டில் கல்வி உரிமைச்சட்டம்-2009, பிரிவு-12(1)(பி), பிரிவு 12(1)(சி)-இன்படி சிறுபான்மை அல்லாத அரசு மானியம் பெறும் மற்றும் மானியம் பெறாத தனியாா் பள்ளிகளில் ஏழைகள், பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு 25 சதவீத மாணவா் சோ்க்கை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் இலவசமாக சோ்க்கை பெறுவதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் செலுத்தியிருந்த விண்ணப்பங்களில் இருந்து, எஞ்சியிருந்த சோ்க்கை இடங்களை நிரப்புவதற்காக 2-ஆவது சுற்று குலுக்கல் புதன்கிழமை நடந்தது. இதில் விண்ணப்பித்திருந்த 6,427 பேரில், 1,016 விண்ணப்பதாரா்கள் சோ்க்கைக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இம்மாணவா்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ஜூன் 15-ஆம் தேதிக்குள் சோ்க்கை பெற்றுக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT