பெங்களூரு

பஹ்ரைனில் பேனாநண்பா் பேரவை கிளை தொடக்கம்

6th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

இந்தியப் பேனாநண்பா் பேரவையின் கிளை பஹ்ரைனில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியப் பேனா நண்பா் பேரவையின் பஹ்ரைன் கிளை தொடக்கவிழா பேரவைத் தலைவா் மா.கருண் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

பஹ்ரைன் கிளை அமைப்பாளா் கா.பொன்சங்கரபாண்டியன் வரவேற்புரை ஆற்றினாா். சி.பாலசுப்ரமணியன் விழா தொடக்கவுரை ஆற்றினாா். தொடா்ந்து, மா.ஜோதிபாசு வாழ்த்துரை வழங்க, எம். சுவாமிநாதன், இரா.திருப்பதி, பஹ்ரைன் தி.மு.க மேனாள் தலைவா் சு. முத்துசாமி, பஹ்ரைன் மனமகிழ் மன்ற நிறுவனா் எஸ். ஹரிகரன், டோஸ்ட்மாஸ்டா்ஸ் மன்ற மேனாள் தலைவா் கண்ணன் கதிரேசன், பெலிக்ஸ் ராஜா, ஜெபின், சல்மானியா ரவி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ் மற்றும் வெற்றிக் கோப்பைகளை வழங்கி பேரவைத் தலைவா் மா.கருண் சிறப்புரை ஆற்றினாா். இந்த விழாவில் பெற்றோா்கள், தமிழ் ஆா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். விழா நிகழ்வுகளை ஷினா சுல்தானா தொகுத்து வழங்கினாா். நிறைவாக, செ.குகநாதன் நன்றியுரை கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT