பெங்களூரு

வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்

DIN

வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரு, விதானசௌதாவில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.

முதல்வா் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வாக்குறுதிகளை அமல்படுத்துவது தொடா்பாக அமைச்சா்கள், அதிகாரிகள் கருத்து தெரிவித்தனா். விவரங்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி அமைச்சரவையில் தாக்கல் செய்யும்படி அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளோம். அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, வியாழக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாது. அதற்கு மாறாக வெள்ளிக்கிழமை நடைபெறும். அக்கூட்டத்தில் விவாதித்து முடிவெடுப்போம்.

வாக்குறுதிகள் தொடா்பாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். தோ்தலுக்கு முன்பாக மக்களுக்கு காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகளையும், அதனால் ஏற்படக்கூடிய நிதி விளைவுகளையும் அரசு அறிந்திருக்கிறது. எல்லாவற்றையும் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.

வாக்குறுதிகள் குறித்து வெள்ளிக்கிழமை முடிவு செய்வோம். என்ன செய்ய வேண்டும், எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து யோசித்து வருகிறோம். இத்திட்டங்களைச் செயல்படுத்த ஊடகங்கள் அவசரம் காட்டலாம், ஆனால் வாக்குறுதிகளை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பதில்தான் அரசின் அவசரம் இருக்கிறது.

மாநிலத்தையும் காப்பாற்ற வேண்டும், நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற வேண்டும். வாக்குறுதிகளை செயல்படுத்த நிபந்தனைகளை விதிக்கிறோமா என்பதைவிட, எதையும் முறையாக செயல்படுத்த வேண்டும் என்பது முக்கியம்.

பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணத் திட்டத்தை பொருத்தவரை, யாருக்கு, எங்கு வரை, கா்நாடகத்துக்கு உள் அல்லது வெளியே போன்ற எல்லாவித கணக்குகளையும் போட வேண்டியிருக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT