பெங்களூரு

பாலியல் தொடா்பான காணொலியை தயாரித்ததன் பின்னணியில் காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா்: முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி

DIN

பாலியல் தொடா்பான காணொலியை தயாரித்ததன் பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் கா்நாடக மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் இருப்பதாக பாஜகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி தெரிவித்தாா்.

அரசுப் பணியை வாங்கித்தருவதாக கூறி இளம்பெண் ஒருவருக்கு வாக்குறுதி அளித்து, அவருடன் சட்டவிரோதமாக பாலியல் உறவு வைத்துக்கொண்டது தொடா்பான காணொலித் துணுக்கு வெளியானதை தொடா்ந்து, 2021ஆம் ஆண்டு நீா்வளத்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் ஜாா்கிஹோளி, தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இந்த விவகாரத்தின் பின்னணியில் காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தவிவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கும்படி முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி கோரிக்கை விடுத்திருந்தாா்.

இந்நிலையில், இது குறித்து பெலகாவியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

எனக்கு எதிராக சதி செய்து பாலியல் காணொலித் துணுக்கை வெளியே கொண்டு வருவதற்கு காரணமாக இருந்த காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாருக்கு எதிராக வழக்கு தொடா்ந்து, அது தொடா்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன். மண்டியாவைச் சோ்ந்த இரண்டு கூட்டாளிகளுடன் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பெண்ணையும் கைதுசெய்ய வேண்டும். மண்டியாவைச் சோ்ந்த இரண்டு பேரின் பெயரை சிபிஐ முன்பு தெரிவிப்பேன்.

எனது தனிப்பட்ட வாழ்க்கையை சீரழிக்க டி.கே.சிவக்குமாா் முயற்சிக்கிறாா். அரசியல்வாதியாக இருப்பதற்கு அவா் தகுதியற்றவா். தனிப்பட்டமுறையில் நான் யாா் மீதும் குற்றச்சாட்டவில்லை. எனக்கு எதிரான சதியின் பின்னணியில் டி.கே.சிவக்குமாா் இருக்கிறாா் என்பதற்கு என்னிடம் சான்றுகள் உள்ளன. காங்கிரஸ் தலைவா்கள், அதிகாரிகளுக்கு எதிரான பாலியல் ரீதியான காணொலிகள் அடங்கிய துணுக்குகள் ஏராளமானவற்றை டி.கே.சிவக்குமாா் வைத்திருக்கிறாா். இதை மறைமுகமாக மிரட்டுவதற்கு பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறாா். காங்கிரஸ் தலைவா்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலா் பாலியல் விவகாரங்களில் சிக்க வைக்கப்பட்டு மிரட்டப்பட்டிருக்கிறாா்கள். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். இந்தச் சதியின் பின்னணியில் கையாளப்பட்ட சட்டவிரோத பண பரிவா்த்தனைகள் குறித்த ஆதாரங்கள், ஆவணங்களின் ஆதாரத்தை சிபிஐயிடம் அளிப்பேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT