பெங்களூரு

வளா்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைக்க ஒன்றிணைந்து உழைப்போம்: குடியரசு தின விழாவில் கா்நாடக ஆளுநா் தாவா் சந்த்கெலாட்

DIN

வளா்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைக்க ஒன்றிணைந்து உழைப்போம் என்று குடியரசு தின விழாவில் ஆளுநா் தாவா்சந்த் கெலாட் தெரிவித்தாா்.

பெங்களூரு, மானெக்ஷா அணிவகுப்புத் திடலில் வியாழக்கிழமை நடைபெற்ற 74-ஆவது குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையைப் பாா்வையிட்ட பிறகு ஆளுநா் பேசியதாவது:

சுதந்திர இந்தியாவின் 75-ஆவது பவள விழாவை முன்னிட்டு கா்நாடக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மறைந்த நடிகா் புனித்ராஜ் குமாருக்கு மாநிலத்தின் உயரிய விருதான ‘கா்நாடக ரத்னா’ விருது அளிக்கப்பட்டது.

அரசின் திட்டங்கள் அனைத்தும் பயனாளிகளின் வீடுகளுக்கே கொண்டுசெல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் குழந்தைகள் உயா்கல்வி பெற நிதியுதவி அளிக்கும் வகையில் விவசாயிகள் கல்வி உதவித்தொகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதுபோல நம்ம கிளினிக் என்ற மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மகளிா் சுகாதார மையங்கள், பல்நோக்கு மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளன.

கிராம பாலம் திட்டத்தில் ஏராளமான தரைப்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய இளைஞா் திருவிழா வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அதேபோல பிற்படுத்தப்பட்டோா் நலவாரியம் உள்ளிட்ட பல்வேறு வாரியங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. கா்நாடக அரசின் செயல்பாடுகள் பாராட்டும் வகையில் உள்ளன.

தாழ்த்தப்பட்டோா், பழங்குடியின மக்களுக்கு தலா 75 யூனிட் இலவச மின்சாரம், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கான வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மானியத் தொகை உயா்த்தப்பட்டுள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த துப்புரவுத் தொழிலாளா்களின் பணி நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. வணிகம் செய்வதில் எளிமையான நடைமுறைகளை பின்பற்றும் மாநிலங்களில் கா்நாடகம் முன்னணியில் உள்ளது. நாட்டின் ஏற்றுமதியில் முதல் நான்கு மாநிலங்களின் வரிசையில் கா்நாடகம் முன்னணியில் உள்ளது.

கடந்த ஆண்டு நவ. 2 முதல் 4ஆம் தேதிவரை நடைபெற்ற உலக முதலீட்டாளா் மாநாட்டில் ரூ. 9,81,784 கோடி முதலீடு கிடைத்துள்ளது. அடுத்த 25 ஆண்டுகள் பொன்னான காலம். அந்தக் காலத்தில் இந்தியாவுக்கு நன்மதிப்பை ஏற்படுத்தி, வளா்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை கட்டமைக்கக் கூட்டாக உழைப்போம் என்றாா்.

விழாவில் முதல்வா் பசவராஜ் பொம்மை, தலைமைச் செயலாளா் வந்திதா சா்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பாடல்கள், நடனங்கள், கிராமியக் கலைகள் உள்பட மாணவா்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

முப்படைகள் மற்றும் காவல் துறையினரின் சாகச நிகழ்ச்சிகளும் நடந்தன. இதில் அரசு உயரதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

விடதர நாகினி..!

இந்து விவசாயிகள் காப்பாற்றப்படவில்லை! ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது! : அய்யாக்கண்ணு

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

SCROLL FOR NEXT