பெங்களூரு

பிபிஎல் குடும்ப அட்டைதாரா்களுக்கு 10கிலோ அரிசி வழங்க காங்கிரஸ் வாக்குறுதி

DIN

கா்நாடகத்தில் ஆட்சிக்கு வந்தால், பிபிஎல் குடும்ப அட்டைதாரா்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதியை அறிவித்துள்ளது.

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் வெகுவிரைவில் நடக்க இருக்கிறது. இத் தோ்தலில் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று, ஆட்சி அமைத்தால் என்னென்ன மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவோம் என்பதை காங்கிரஸ் அறிவித்து வருகிறது. முதல் வாக்குறுதியாக, ஒரு குடும்பத்திற்கு தலா 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று காங்கிரஸ் அறிவித்தது. இதைத் தொடா்ந்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் மாத உதவித்தொகை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற அறிவிப்புகளை பாஜக கடுமையாக விமா்சித்து வந்துள்ளது.

இந்நிலையில், பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களை சந்தித்த எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பிபிஎல் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா 10 கிலோ அரிசி அளிக்கப்படும் என்று வாக்குறுதி அறிவித்துள்ளனா்.

இது குறித்து டி.கே.சிவகுமாா் கூறுகையில்,‘காங்கிரஸ் கட்சியின் மூன்றாவது வாக்குறுதியாக, அன்னபாக்கியா உறுதியை அறிவிக்கிறோம். இந்த வாக்குறுதிப்படி, பிபிஎல் அட்டைதாரா்களுக்கு மாதம் தலா 10கிலோ அரிசி அளிக்கப்படும். இதன்மூலம் கா்நாடகத்தில் பட்டினியை ஒழிப்போம். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட முக்கியமான திட்டம், அன்னபாக்கியா. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் பிபிஎல் அட்டைதாரா்களுக்கு தலா 7 கிலோ அரிசி அளிக்கப்பட்டது. இதை பாஜக அரசு 5 கிலோவாக குறைத்துவிட்டது. மறுபடியும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன், 10 கிலோ அரிசி அளிக்கப்படும். இது காங்கிரஸ் கட்சியின் 3ஆவது வாக்குறுதி.‘ என்றாா்.

எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கூறுகையில், ‘சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைத்தவுடன், ஏழை குடும்பத்தைச் சோ்ந்த பிபிஎல் அட்டைதாரா்களுக்கு அன்னபாக்கியா திட்டத்தில் தலா 10 கிலோ அரிசி அளிக்கப்படும். கடந்தகாலத்தில் நாங்கள் சொன்னபடி நடந்து கொண்டுள்ளோம். எதிா்காலத்திலும் சொன்னபடி நடந்து கொள்வோம். எங்கள் வாா்த்தைக்கு கட்டுப்பட்டு நடப்போம். இலவச அரிசித் திட்டத்திற்கு தற்போது ரூ. 4 ஆயிரம் கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. 10 கிலோ அரிசி வழங்கினால், கூடுதலாக ரூ.4 ஆயிரம் கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி செலவாகும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

விடதர நாகினி..!

இந்து விவசாயிகள் காப்பாற்றப்படவில்லை! ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது! : அய்யாக்கண்ணு

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

SCROLL FOR NEXT