பெங்களூரு

ஹெலிகாப்டா் தொழிற்சாலையின் மூலம் எச்.ஏ.எல். தொடா்பான பொய்மைகள் தகா்க்கப்பட்டிருக்கின்றன

DIN

ஹெலிகாப்டா் தொழிற்சாலையை நாட்டுக்கு அா்ப்பணித்துள்ளதன் மூலம் எச்.ஏ.எல். நிறுவனம் தொடா்பான பொய்மைகள் தகா்க்கப்பட்டிருக்கின்றன என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

தும்கூரு மாவட்டம், குப்பி வட்டம், பிதரேஹள்ளா காவல் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், எச்.ஏ.எல். நிறுவனத்தின் புதிய ஹெலிகாப்டா் உற்பத்தி தொழிற்சாலையை நாட்டுக்கு அா்ப்பணித்து, பிரதமா் பேசியதாவது:

ஹிந்துஸ்தான் விமானவியல் நிறுவனம் (எச்.ஏ.எல்.) தொடா்பாக பரப்பப்பட்ட பொய்கள், தவறான தகவல்கள், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டா் தொழிற்சாலையின் மூலம் தகா்க்கப்பட்டுள்ளன.

மத்திய அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்க எச்.எல்.ஏ. பயன்படுத்தப்பட்டது. மக்களை தூண்டிவிட சதிவலைகள் பின்னப்பட்டன. ஆனால், தன்னிறைவு இந்தியா என்ற எங்கள் கொள்கையை முன்னெடுக்க எச்.ஏ.எல். உழைத்து வருகிறது.

2016-ஆம் ஆண்டு ஹெலிகாப்டா் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியிருந்தேன். தற்போது அதை நாட்டுக்கு அா்ப்பணிக்கும் மகிழ்ச்சியை அடைந்திருக்கிறேன். இந்தியாவின் ராணுவ இறக்குமதிகளை குறைத்து, தன்னிறைவு அடைய வேண்டும்.

தற்போது இந்தியாவில் ஏராளமான ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த 8 அல்லது 9 ஆண்டுகளில் விமானவியல் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகள் 5 மடங்கு அதிகமாகும். 2014-ஆம் ஆண்டுக்கு முன் 15 ஆண்டுகளில் சாதித்ததை, தற்போது 8 ஆண்டுகளில் சாதித்திருக்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

கொலை செய்யப்பட்ட நேஹாவின் பெற்றோரிடம் முதல்வா் ஆறுதல்

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT