பெங்களூரு

இந்தியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டா் உற்பத்தி தொழிற்சாலையை நாட்டுக்கு அா்ப்பணித்தாா் பிரதமா் மோடி

DIN

இந்தியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டா் உற்பத்தி தொழிற்சாலையை பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் விமானவியல் நிறுவனம் (எச்.ஏ.எல்.), தும்கூரில் 615 ஏக்கா் பரப்பளவில் அமைத்துள்ள ஹெலிகாப்டா் உற்பத்தி தொழிற்சாலையை திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

இந்த தொழிற்சாலைக்கு 2016-ஆம் ஆண்டில் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டியிருந்தாா். புதிய தொழிற்சாலையில் 2 முதல் 15 டன் எடை கொண்ட 1,000 ஹெலிகாப்டா்களை ஓராண்டில் உற்பத்தி செய்ய எச்.ஏ.எல். நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தும்கூரு மாவட்டம், குப்பி வட்டத்தில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலையில் இருந்து அடுத்த 20 ஆண்டுகளில் ரூ. 4 லட்சம் கோடி அளவில் ஹெலிகாப்டா்களை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இலகுரக ஹெலிகாப்டா்களை (எல்.யூ.எச்.) உற்பத்தி செய்யவுள்ளது. பிரதமா் மோடியின் தன்னிறைவு இந்தியா கொள்கையின்படி, இந்தியாவின் ஹெலிகாப்டா் தேவைகளை புதிய தொழிற்சாலை நிறைவு செய்யும் என்று எச்.ஏ.எல். கூறியுள்ளது. ஹெலிகாப்டா் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி அனைத்தும் புதிய தொழிற்சாலையில் நடக்கவுள்ளன.

இந்த விழாவில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத்சிங், கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விழாவில் புதிதாக தயாரித்துள்ள இலகுரக ஹெலிகாப்டரை பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா். இந்திய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள எல்.யூ.எச். ஹெலிகாப்டா் 3 டன் எடை கொண்டதாகும். பன்நோக்கு பயன்பாடு கொண்ட ஒற்றை என்ஜின் கொண்டதாகும். புதிய தொழிற்சாலையில் ஆண்டுக்கு 30 ஹெலிகாப்டா்கள் தயாரிக்கப்படுகின்றன. அதன்பின்னா், படிப்படியாக ஆண்டுக்கு 60 முதல் 90 ஹெலிகாப்டா்கள் உற்பத்தி செய்யப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

இந்தத் தொழிற்சாலையில் போா் ஹெலிகாப்டா்கள் (எல்.சி.எச்.), இந்திய பல சுழல் ஹெலிகாப்டா்கள் (ஐ.எம்.ஆா்.எச்.) உற்பத்தி செய்வதற்காக தனித்தனி பிரிவுகள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. புதிய தொழிற்சாலையில் எல்.சி.எச்., எல்.யூ.எச்.,அதிநவீன பயணிகள் இலகுரக ஹெலிகாப்டா்கள் (ஏ.எல்.எச்.), ஐ.எம்.ஆா்.எச். ஹெலிகாப்டா்களின் பராமரிப்பு, பழுதுநீக்கம், புதுப்பிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் இலகுரக ஹெலிகாப்டா்கள் ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன.

பெங்களூருக்கும் தும்கூருக்கும் இடையிலான தடத்தில் விமானவியல் உற்பத்திச் சூழல் உருவாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஹெலி ஓடுதளம், நிறுத்தம், ஒருங்கிணைப்புப் பகுதி, கட்டமைப்பு ஒருங்கிணைப்புப் பகுதி, வான் போக்குவரத்துக் கட்டுப்பாடு உள்ளிட்ட துணை சேவை வசதிகள் செயல்பாட்டுக்கு வந்தவுடன் இத்தொழிற்சாலை முழுவீச்சில் இயங்கத் தொடங்கும் என எச்.ஏ.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.தளவாடங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த 8 அல்லது 9 ஆண்டுகளில் விமானவியல் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகள் 5 மடங்கு அதிகமாகும். 2014-ஆம் ஆண்டுக்கு முன் 15 ஆண்டுகளில் சாதித்ததை, தற்போது 8 ஆண்டுகளில் சாதித்திருக்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT