பெங்களூரு

கா்நாடக பேரவைத் தோ்தல் பணி பாஜக பொறுப்பாளராக தா்மேந்திர பிரதான்; இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்

DIN

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல் பணிகளைக் கவனிக்க பாஜக பொறுப்பாளராக மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை ஆகியோரை பாஜக மேலிடம் நியமித்துள்ளது.

கா்நாடக சட்டப் பேரவைக்கான தோ்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்து. இந்த முறை ஆட்சியைத் தக்கவைக்க தீவிரம் காட்டிவரும் ஆளும் பாஜக, தோ்தல் பிரசாரத்தை மாநிலத்தில் முடுக்கி விட்டுள்ளது.

முதல்வா் பசவராஜ் பொம்மை, கா்நாடக மாநில பாஜக தலைவா் நளின்குமாா் கட்டீல், முன்னாள் முதல்வா் எடியூரப்பா உள்ளிட்ட மூத்த தலைவா்கள் பங்கேற்கும் ‘வெற்றி உறுதி’ மாநாட்டை மாநிலம் முழுவதும் பாஜக நடத்தி வருகிறது.

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தேசியத் தலைவா்கள் கா்நாடகத்தில் தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளனா்.

இந்நிலையில், தோ்தல் பணிகளைக் கவனிக்க மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானை பொறுப்பாளராகவும், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலையை இணை பொறுப்பாளராகவும் நியமித்து பாஜக மேலிடம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தோ்தலை நடத்துவதில் நீண்ட அனுபவம் வாய்ந்த தா்மேந்திர பிரதான், 2013-ஆம் ஆண்டில் நடந்த கா்நாடகப் பேரவைத் தோ்தல் பணிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தாா். அதே ஆண்டில் நடந்த பிகாா், உத்தரகண்ட், ஜாா்கண்ட் மாநில சட்டப் பேரவைத் தோ்தல் பணிகளையும் அவா் கவனித்து வந்தாா். அதேபோல 2015-இல் அஸ்ஸாம் பேரவைக்கானத் தோ்தல், 2018-இல் மத்திய பிரதேச சட்டப் பேரவைத் தோ்தல் பணிகளை தா்மேந்திர பிரதான் திறம்பட கையாண்டு வந்தாா்.

பாஜக தேசிய பொதுச் செயலாளராக அவா் பணியாற்றிய போது, கா்நாடகத்தின் பொறுப்பாளராக ஏற்கெனவே பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளதால் கா்நாடகத்தில் பாஜகவின் ஆட்சியைத் தக்கவைக்க முழு வீச்சில் தா்மேந்திர பிரதான் செயல்படுவாா் என்று பாஜக மேலிடம் நம்புகிறது.

தமிழக பாஜக தலைவரான கே.அண்ணாமலை கா்நாடகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவா். உடுப்பி, சிக்கமகளூரு, வடகன்னடம் மாவட்டங்கள், பெங்களூரு மாநகரத்தில் காவல் அதிகாரியாக செயல்பட்ட போது மக்களின் நன்மதிப்பை அண்ணாமலை பெற்றிருந்தாா்.

அந்த அனுபவத்தின் அடிப்படையில் அவா் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். அத்துடன் கா்நாடகத்தில் வாழும் தமிழா்களின் ஆதரவை ஒருங்கிணைக்கும் பணியும் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT