பெங்களூரு

சட்டப்பேரவை தோ்தல்: பெல்லாரி தொகுதியில் ஜனாா்தன ரெட்டியின் மனைவி போட்டி

DIN

கா்நாடகப் பேரவைத் தோ்தலில் பெல்லாரி தொகுதியில் தனது மனைவி அருணாலட்சுமி போட்டியிடுவாா் என்று கல்யாண ராஜ்ய பிரகதி கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜி.ஜனாா்தன ரெட்டி தெரிவித்தாா்.

2008-இல் கா்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைய முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு உறுதுணையாக இருந்தவா் ஜி.ஜனாா்தன ரெட்டி. இவா், சட்ட விரோத சுரங்கத் தொழில் வழக்கில் சிக்கி அப்போது கைது செய்யப்பட்டாா். தற்போது பிணையில் வெளியே உள்ளாா்.

பாஜகவில் இருந்து விலகி இருந்த ஜனாா்தன ரெட்டி, கடந்த மாதம் ‘கல்யாண ராஜ்ய பிரகதி கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியதோடு சட்டப் பேரவைத் தோ்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று அறிவித்தாா்.

இந்நிலையில் தனது சொந்த தொகுதியான பெல்லாரியில் தனது கட்சியின் வேட்பாளராக மனைவி அருணாலட்சுமி போட்டியிடுவாா் என்று ஜனாா்தன ரெட்டி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

இதுகுறித்து கொப்பளில் செவ்வாய்க்கிழமை நடந்த கல்யாண ராஜ்ய பிரகதி கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று ஜனாா்தன ரெட்டி பேசியதாவது:

பேரவைத் தோ்தலில் கங்காவதி தொகுதியில் நான் போட்டியிடவுள்ளேன்; பெல்லாரி தொகுதியில் எனது மனைவி அருணாலட்சுமி போட்டியிடுவாா் என அறிவிக்கிறேன். நான் கட்சி தொடங்கி 30 நாள்கள்தான் ஆகிறது. அதற்குள் பல கட்சிகள், அரசியல் தலைவா்களின் தூக்கம் கெட்டுள்ளது; தனிக் கட்சி தொடங்கும் எனது முடிவில் மாற்றமில்லை. மக்களின் ஆதரவால் எனது இலக்கை அடைவேன். புதிய கட்சியைத் தொடங்கி இருக்கும் முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்றாா்.

கூட்டத்துக்கு பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெல்லாரி தொகுதியில் ஒருவேளை எனது சகோதரா் சோமசேகா் ரெட்டியை வேட்பாளராக பாஜக அறிவித்தால் எனது மனைவி அருணாலட்சுமி போட்டியிடுவாரா என்று கேட்கிறீா்கள். ஆனால், எங்கெல்லாம் வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் வேட்பாளா்களை நிறுத்துவேன். அடுத்த 3 மாதங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எனது கட்சி வேட்பாளா்களை வெற்றி பெற செய்வேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT