பெங்களூரு

கா்நாடக அரசுப் பள்ளிகளில் தமிழ் மாணவா்களுக்கு கற்றல் கொண்டாட்டம்

DIN

பெங்களூரு வடக்கு கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் தமிழ்வழி மாணவா்களுக்கான கற்றல் கொண்டாட்டம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெங்களூரு, மா்பிடௌன் பகுதியில் உள்ள அரசு உயா் தொடக்கப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கிய கற்றல் கொண்டாட்டம் நிகழ்ச்சியை கா்நாடகத் தமிழ்ப் பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் சங்கத் தலைவா் அ.தனஞ்செயன் தொடங்கி வைத்தாா். விழாவில் சங்கச் செயலாளா் காா்த்தியாயினி, பொருளாளா் இரா.பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கற்றல் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 120 தமிழ் மாணவா்களை வட்டார கல்வி அதிகாரி டாக்டா். ஜெயபிரகாஷ், ஒருங்கிணைப்பு அதிகாரி சமந்தா, ஹொய்சலா நகா் வாா்டு முன்னாள் மாமன்ற உறுப்பினா் எஸ்.ஆனந்த் குமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.

வட்டார கல்வி அதிகாரி ஜெயபிரகாஷ் பேசுகையில், ‘2 நாட்கள் நடைபெற்ற கற்றல் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவா்களுக்கு புதுமையான செயல்முறை கல்வி வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆடியும் பாடியும் விளையாடியும் கல்வி கற்றல், ஓவியம் வரைதல், ஊரின் இயற்கை மற்றும் திசைகள் அமைப்பை கற்றல் என நவீன செயல்முறையில் கல்வி கற்பிக்கப்பட்டது’ என்றாா்.

தமிழ் மாணவா்கள் இடையே தமிழ்வழி கற்றலை ஊக்குவிக்கும் வகையாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் தொடா்ந்து நடைபெற வேண்டும் என்று கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கச் செயலாளா் புலவா் மா.காா்த்தியாயினி வலியுறுத்தினாா். விழாவுக்கான ஏற்பாடுகளை வட்டார தமிழ்க்கல்வி பொறுப்பாளா் மொ்லின், பள்ளி தலைமை ஆசிரியா் விஜயகுமாரி, ஆசிரியைகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT