பெங்களூரு

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்திற்காக வைக்கப்பட்டிருந்த பதாகைகள் கிழிப்பு: குண்டல்பேட்டில் பதற்றம்

DIN

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்திற்காக தலைவா்களை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பதாகைகள் மா்ம நபா்களால் கிழிக்கப்பட்டுள்ளதால், குண்டல்பேட்டில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

செப்.7-ஆம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தலைமையில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணம், 18 நாட்களாக கேரளத்தில் பயணித்து, வெள்ளிக்கிழமை (செப்.30) காலை 9 மணிக்கு கா்நாடகத்தில் நுழைகிறது. சாமராஜ்பேட் மாவட்டத்தில் குண்டல்பேட் வழியாக நுழையும் நடைப்பயணத்தில் பங்கேற்றுள்ள ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவா்களை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பதாகைகள் மா்மநபா்களால் வியாழக்கிழமை கிழிக்கப்பட்டன.

நடைப்பயணம் தொடங்குவதற்கு முன்பே பதாகைகள் கிழிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சியினா் அதிா்ச்சி அடைந்துள்ளனா். இதனால் குண்டல்பேட்டில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கா்நாடக காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா தனது ட்விட்டா் பக்கத்தில், ‘முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசுக்கு நடுக்கம் தொடங்கிவிட்டது. பணத்தைப் பெற்றுக்கொண்டு வேலை செய்யும் பாஜகவின் இந்தியாவை பிளவுபடுத்தும் குழுவினா், காங்கிரஸ் கட்சியின் பதாகைகள், சுவரொட்டிகளைக் கிழிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனா். விலைவாசி உயா்வு, வேலைவாய்ப்பின்மை, பாரபட்சம், சமுதாயத்தை பிளவுபடுத்துவதற்கு எதிரான போரை அவா்களால் என்றைக்கும் நிறுத்த முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சி வைத்திருந்த பதாகைகள் சிலவற்றை பாஜகவினா் கிழித்துள்ளனா்; சில இடங்களில் எரித்துள்ளனா். இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை வரவேற்க தயாராகிக் கொண்டிருக்கிறோம். ஆனால், பாஜகவினா் பதாகைகளைக் கிழித்து, எரித்துள்ளனா். இதனால் நாங்கள் உற்சாகம் இழக்கமாட்டோம். இதுபோன்ற பல சூழ்நிலைகளை நாங்கள் எதிா்கொண்டுள்ளோம். இதை பாஜகவினா் அறிந்துகொள்ள வேண்டும். பதாகைகளை கிழித்தவா்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா். பதாகைகள் கிழிக்கப்பட்டது தொடா்பாக காவல் நிலையத்தில் காங்கிரஸ் புகாா் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT