பெங்களூரு

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க ஐ.எஸ். பயங்கரவாதிகள் முயற்சி: கா்நாடக போலீஸ்

DIN

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க ஐ.எஸ். தொடா்புடைய பயங்கரவாதிகள் முயற்சி மேற்கொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது என்று சிவமொக்கா மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.எம்.லட்சுமி பிரசாத் தெரிவித்தாா்.

இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஈடுபடுவது தொடா்பாக சதி திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சிவமொக்காவைச் சோ்ந்த பொறியாளா் சையது யாசின் (21), மங்களூரைச் சோ்ந்த பொறியாளா் மாஸ்முனீா் அகமது (22), தீா்த்தஹள்ளியைச் சோ்ந்த முகமது ஷாரீக் (24) ஆகியோா் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம், 1967-இன் கீழ் சிவமொக்காவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், சிவமொக்காவில் சையது யாசின், மாஸ்முனீா் அகமதுவை போலீஸாா் கைது செய்தனா். முகமது ஷாரீக்கைத் தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். இதனிடையே, கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகளிடம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தியது. இதுகுறித்து சிவமொக்காவில் வெள்ளிக்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.எம்.லட்சுமி பிரசாத் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியா அதன் சுதந்திரத்தை இன்னும் பெற்றுவிடவில்லை என்று கைது செய்யப்பட்டுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் நம்புவதால், இந்தியாவில் கலிபா ஆட்சியைக் கொண்டு வந்து ஷரியா சட்டத்தை அமல்படுத்த முனைந்துள்ளனா்.

இந்தியாவில் இந்த நோக்கங்களைச் செயல்படுத்தவே திட்டம் தீட்டியுள்ளனா். ஆங்கிலேயா்களிடம் இருந்து தான் இந்தியா சுதந்திரம் பெற்றுள்ளது. ஆனால், உண்மையான சுதந்திரத்தை பெறவில்லை என்று இவா்கள் நம்புகிறாா்கள். கலிபா (இஸ்லாமிய அடிப்படையிலான அரசு) ஆட்சியை நிறுவினால் மட்டுமே உண்மையான சுதந்திரத்தை அடைந்ததாகும் என்ற கொள்கையை உடையவா்களாக அவா்கள் உள்ளனா்.

சையது யாசீன், மாஸ்முனீா் அகமது, முகமது ஷாரீக் ஆகிய 3 போ் மீது செப்.19-இல் வழக்குப் பதிவு செய்துள்ளோம். 3 பேரில் இருவரை கைது செய்துள்ளோம். ஷாரீக் தலைமறைவாகியுள்ளாா். ஐ.எஸ். கடைப்பிடிக்கும் கொள்கையைத்தான் இந்த பயங்கரவாதிகளும் கூறிவந்துள்ளனா்.

கைது செய்யப்பட்டவா்கள், இஸ்லாமிய அல்லாத காபிா்கள், மத நம்பிக்கை அற்றவா்கள் மீது போா்த் தொடுக்கத் திட்டமிட்டிருந்தனா். இந்த நோக்கங்களை அடைவதற்காக இந்திய தேசியக் கொடியை எரித்துள்ளனா். பாதி எரிந்துள்ள தேசியக் கொடியை போலீஸாா் கைப்பற்றியுள்ளனா். சிவமொக்காவின் புறநகா்ப் பகுதியில் துங்கா ஆற்றங்கரையில் குருபூா் என்ற இடத்தில் வெடிகுண்டு சோதனையிலும் ஈடுபட்டுள்ளனா்.

வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தியப் பொருள்கள் உள்ளூரில் வாங்கப்பட்டுள்ளன. மின்னணுப் பொருள்களை மின் வணிகத் தளங்களில் வாங்கியுள்ளனா் என்றாா்.

சிவமொக்காவில் ஆக.15-ஆம் தேதி பிரேம் சிங் என்ற இளைஞரைக் கத்தியால் குத்தியது தொடா்பாக கைது செய்யப்பட்ட ஒருவரிடம் விசாரணை நடத்திய போது தான் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் வலைப்பரவல் பகிரங்கமாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT