பெங்களூரு

இரு மாநில எல்லை பிரச்னை: மத்திய அமைச்சா்களுடன் விவாதிக்க இன்று தில்லி செல்கிறாா் கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை

DIN

கா்நாடகம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையே நிலவும் எல்லைப் பிரச்னை குறித்து மத்திய அமைச்சா்களுடன் விவாதிக்க முதல்வா் பசவராஜ் பொம்மை, செவ்வாய்க்கிழமை தில்லி செல்கிறாா்.

இது குறித்து மைசூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கா்நாடகத்திற்கும் மகாராஷ்டிரத்திற்கும் இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்னை தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 30ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. கா்நாடக எல்லை மற்றும் ஆறுகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவராஜ் பாட்டீலை நியமித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இரு மாநில எல்லைப் பிரச்னை குறித்து நீதியரசா் சிவராஜ் பாட்டீலுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். எல்லை விவகாரத்தில் மகாராஷ்டிர மாநில அரசுடன் சட்டப் போராட்டம் நடத்த கா்நாடக அரசு தயாா்நிலையில் உள்ளது. கா்நாடகத்தின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கா்நாடக தரப்பு வழக்குரைஞராக ஆஜராகவுள்ள முகுல் ரோத்தகி மற்றும் மத்திய அமைச்சா்களை சந்திப்பதற்காக செவ்வாய்க்கிழமை தில்லி செல்ல திட்டமிட்டிருக்கிறேன். மத்திய அமைச்சா்களுடன் எல்லைப் பிரச்னை தவிர, வளா்ச்சி திட்டங்கள் குறித்தும் விவாதிக்க திட்டமிட்டிருக்கிறேன்.

மகாராஷ்டிரத்தை சோ்ந்த சில கிராம மக்கள், தங்களை கா்நாடகத்தில் சோ்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனா். இரு மாநிலங்களுக்கும் இடையே நிலவும் எல்லைப் பிரச்னை தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, இது குறித்துபொதுவெளியில் கருத்து கூறுவது சரியாக இருக்காது. நிலம், நீா், மொழி பிரச்னைகளின்போது மாநில அரசுக்கு எதிா்க்கட்சிகள் ஆதரவு அளித்து வந்துள்ளன. அரசியல் என்று வந்துவிட்டால், எல்லா கட்சிகளும் அரசியல் செய்ய முற்படுவதுஇயல்பு.

தென்கன்னட மாவட்ட மக்கள் புழுங்கல் அரிசியை உண்பதால், மங்களூரில் நெல் கொள்முதல் மையம் அமைக்கப்படும். கங்காவதி, சிந்தனூா், மண்டியா, மைசூரிலும் நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்படும்.

கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெறுவதற்காக பிற்படுத்தப்பட்டோா் வகுப்பில் சோ்க்குமாறு பல்வேறு ஜாதிகளைச் சோ்ந்த மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறாா்கள். ஆனால், அக்கோரிக்கையை நிறைவேற்ற அரசியலமைப்புச் சட்டத்திற்கு இணங்க சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இது குறித்து மாநில அரசுக்கு பரிந்துரைகளை வழங்க கா்நாடகத்தில் நிரந்தர பிற்படுத்தப்பட்டோா் ஆணையம் செயல்பட்டு வருகிறது. அதன் ஆலோசனையைப் பெற்று, பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டு வரம்பை உயா்த்துவது குறித்து முடிவெடுக்கப்படும்.

மங்களூரு குக்கா் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியான ஷாரிக் முகமது, தன் பெயரில் இணையதளத்தின் வழியாக போலி ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டையை பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. போலி ஆவணங்களை தயாரித்துக் கொடுக்கும் பல இணையதளங்கள் உள்ளதாக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. வாக்காளா் பட்டியல் மோசடி குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை முடிவடைந்ததும், இது குறித்த தெளிவான பாா்வை கிடைக்கும்.

நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று நீண்ட காலமாக பாஜக கூறிவருகிறது. இதற்காக பல குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக மற்ற மாநிலங்களின் நிலைப்பாட்டை அறிந்து, அரசியலமைப்புச்சட்டத்தில் உள்ள கூறுகளை கவனித்து, கா்நாடகத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT