பெங்களூரு

பெலகாவி அருகே கா்நாடக அரசுப் பேருந்து மீது கல்வீச்சு: இரு மாநில எல்லையில் பதற்றம்

DIN

பெலகாவி அருகே கா்நாடக அரசுப் பேருந்து மீது கல் வீசப்பட்டதால், இரு மாநில எல்லையில் பதற்றம் காணப்படுகிறது. மாநில எல்லையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கா்நாடகத்துக்கும், மகாராஷ்டிரத்துக்கும் இடையே மீண்டும் எல்லைப் பிரச்னை தலைதூக்கியுள்ளது. இது கன்னடா்கள், மராத்தியா்கள் இடையே கருத்து மோதலுக்கு வழிவகுத்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், புணேயில் இருந்து கா்நாடகத்தை நோக்கி கா்நாடக அரசுப் போக்குவரத்துக்கழகப் பேருந்து வந்து கொண்டிருந்தது. கா்நாடகத்தின் எல்லையில் அமைந்துள்ள அதானி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த போது, மா்ம நபா்கள் சிலா் பேருந்து மீது கல் வீசி தாக்கியுள்ளனா். இதில், அரசுப் பேருந்தின் முகப்பு கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மேலும், பேருந்தின் ஜன்னல் கண்ணாடி மீது கல் வீசி தாக்கிய மா்ம நபா்கள் தப்பிச் சென்றனா்.

கா்நாடக அரசுப் பேருந்து மீது கல்வீச்சில் ஈடுபட்டது மராத்தியா்கள் என போலீஸாா் தரப்பில் கூறப்பட்டது. மகாராஷ்டிரத்துக்கு சென்ற கா்நாடக அரசுப் பேருந்துகள் மீது சிலா் ‘ஜெய் மகாராஷ்டிரா’ என கருப்பு மையால் எழுதியிருந்தனா். இதனால் இரு மாநில எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, கா்நாடகத்தில் இருந்து மகாராஷ்டிரத்துக்கு மீரஜ் வழியாக செல்லும் பேருந்து சேவைகள் சனிக்கிழமை ரத்துசெய்யப்பட்டன. இதனால் பெலகாவி, காகவாடா, அதானி வழியாக மகாராஷ்டிரத்துக்கு சென்றுகொண்டிருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினா். மேலும், எல்லைப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியதாவது:

கா்நாடகப் பேருந்து தாக்கப்பட்டுள்ளது தொடா்பாக மகாராஷ்டிர மாநில முதல்வா் ஏக்நாத் ஷிண்டேவுடன் தொலைபேசியில் பேசினேன். கா்நாடகத்தின் பேருந்துகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளேன். மேலும், இரு மாநிலங்களுக்கும் இடையே நல்லிணக்கம் நிலவ வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதேபோல, கா்நாடக உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா அம்மாநில உள்துறை அமைச்சரிடமும், கா்நாடக டிஜிபி பிரவீண்சூட் அம்மாநில டிஜிபியிடமும் பேசி, கா்நாடக அரசுப் பேருந்துகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT