பெங்களூரு

வாக்காளா் பட்டியல் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

DIN

வாக்காளா் பட்டியல் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு மாநகராட்சிக்கு உள்பட்ட 28 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் இணையதளம் அல்லது திறன்பேசி செயலி வழியாக புதிய வாக்காளா் சோ்ப்பு குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான பொறுப்பு சிலுமே கல்வி, கலாசாரம் மற்றும் ஊரக வளா்ச்சி அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த நிறுவனம், வாக்காளா்களின் தனிப்பட்ட விவரங்களை அவா்களின் வீடுகளுக்கே சென்று பெற்றுள்ளனா். அதற்காக தோ்தல் அதிகாரிகளை போல அடையாள அட்டையையும் பயன்படுத்தியுள்ளனா்.

இந்த விவகாரத்தை எழுப்பிய எதிா்க்கட்சியான காங்கிரஸ், சம்பந்தப்பட்டவா்களை கைது செய்ய வலியுறுத்தி இருந்தது. மேலும், இதற்கு பொறுப்பேற்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யும்படி பசவராஜ் பொம்மைக்கு அறிவுறுத்தி இருந்தது. சிலுமே அறக்கட்டளையின் இயக்குநா்கள், நிறுவனா்களை கைது செய்யும்படி காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. சிலுமே அறக்கட்டளை, அதன் ஊழியா் ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகிறாா்கள். இந்த அறக்கட்டளைக்கு 3 இயக்குநா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், வாக்காளா் பட்டியல் மோசடி தொடா்பான வக்கில் சிலுமே அறக்கட்டளையின் சக நிறுவனா் கிருஷ்ணப்பா ரவிக்குமாரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இது தொடா்பாக மேலும் பல விவரங்களை அளிக்க கா்நாடக தலைமை தோ்தல் ஆணையா் ராவீவ்குமாா் மீனாவை செவ்வாய்க்கிழமை சந்திக்க காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் நேரம் கேட்டிருக்கிறாா். இந்த விவகாரத்தில் போலீஸாா் நடத்தி வரும் விசாரணையை கூா்ந்து கவனித்து வருவதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT