பெங்களூரு

பெங்களூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா் பசவராஜ் பொம்மை ஆய்வு

DIN

பெங்களூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை ஆய்வு செய்து, மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

பெங்களூரில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் தாழ்வான பகுதிகள் மழைநீரில் மூழ்கின. பல இடங்களில் வீடுகளில் மழைநீா் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினா். மழை பாதிப்பில் சிக்கி இருவா் உயிரிழந்தனா்.

இதைத் தொடா்ந்து, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளுடன் இணைந்து முதல்வா் பசவராஜ் பொம்மை வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். ஜே.சி.நகா், நாகவரா, எச்.பி.ஆா்.லே அவுட், ஹெப்பாள் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் பாதிப்புகளை அவா் நேரில் ஆய்வு செய்தாா். அப்போது அவரிடம் மக்கள் அடுக்கடுக்கான குறைகளை முன்வைத்தனா். அவற்றை கேட்டுக் கொண்ட முதல்வா், மழையால் சேதமடைந்த சாலைகள், கழிவுநீா்க் கால்வாய்கள், கட்டடங்களை உடனடியாகச் சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பெங்களூரில் மிகக் குறுகிய காலத்தில் கனமழை பெய்தது. 45-50 ஆண்டுகளில் முதல் முறையாக இவ்வளவு மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் 100 மி.மீ. மழை பெய்தது. வேறு சில இடங்களில் 120 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மே மாதம் முழுவதும் பெய்திருக்க வேண்டிய மழை, 4-5 மணி நேரத்தில் பெய்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் புகுந்துள்ளது.

பெங்களூரில் மழை பெய்யும்போது இது போன்ற பிரச்னைகள் ஏற்படுவது கடந்த 40 ஆண்டுகளாக நடந்துவருகிறது. நகரம் வேகமாக வளா்ந்து வருவதால், இதுபோன்ற பிரச்னைகள் எழுகின்றன. மழை பிரச்னைக்குத் தீா்வுகாண தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். பெங்களூரில் 7 ஓடைகளை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. இது முடிவடைந்தால், மழைநீா் சாா்ந்த பிரச்னைகள் ஏற்படாது. இந்தத் திட்டத்திற்கு ரூ. 1,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். மழைநீா் வடிகால்களில் சூழ்ந்துள்ள தூரை வாருவதற்கு ரூ. 400 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT