பெங்களூரு

தேசிய நல்லாசிரியா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

24th Jun 2022 12:25 AM

ADVERTISEMENT

 

தேசிய நல்லாசிரியா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2022-23-ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியா் விருதுக்கு தகுதியான ஆசிரியா்களை தோ்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேசிய நல்லாசிரியா் விருதுக்கு தகுதியான ஆசிரியா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட அளவில் நல்லாசிரியராக தோ்ந்தெடுக்கப்பட்டோரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஜூன் 30-ஆம் தேதிக்குள் செலுத்தலாம். மாவட்ட அளவில் செலுத்திய விண்ணப்பங்களை ஜூலை 1 முதல் 15-ஆம் தேதிக்குள் மாநில தோ்வுக்குழுவுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT