பெங்களூரு

சட்டப்பேரவை தோ்தல்: கோலாா் தொகுதியில் சித்தராமையா போட்டியிட வலியுறுத்தல்

7th Jul 2022 12:41 AM

ADVERTISEMENT

 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில், கோலாா் தொகுதியில் இருந்து போட்டியிடுமாறு எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவை அம்மாவட்டத்தைச் சோ்ந்த காங்கிரஸ் நிா்வாகிகள் நேரில் வலியுறுத்தினா்.

2018-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் முன்னாள் முதல்வா் சித்தராமையா, மைசூரு மாவட்டம், சாமுண்டீஸ்வரி தொகுதியில் படுதோல்வி அடைந்தாா். மற்றொரு தொகுதியான பாதாமியில் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, எதிா்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டு வருகிறாா். ஆனால், வட கா்நாடகத்தில் இருக்கும் பாதாமிக்கு அடிக்கடி செல்ல முடியாததால், தனது சொந்த ஊரான மைசூரு அல்லது பெங்களூருக்கு அருகே உள்ள தொகுதியில் போட்டியிட சித்தராமையா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பெங்களூரில் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவின் இல்லத்தில் புதன்கிழமை கோலாா் மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் சந்தித்தனா். இந்தக் குழுவில் அந்த மாவட்டத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரமேஷ்குமாா், எஸ்.என்.நாராயணசாமி, நஞ்சே கௌடா, சரத்பச்சே கௌடா, முன்னாள் அமைச்சா் கிருஷ்ணபைரே கௌடா, எம்எல்சிக்கள் நசீா் அகமது, சிவசங்கா் ரெட்டி, முன்னாள் எம்எல்ஏக்கள் கொத்தூா் மஞ்சுநாத், எம்.சி.சுதாகா், மாவட்டக் கூட்டுறவு வங்கித் தலைவா் பியாலஹள்ளி கோவிந்த கௌடா உள்ளிட்டோா் இடம் பெற்றிருந்தனா்.

ADVERTISEMENT

அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது கோலாா் தொகுதியில் இருந்து போட்டியிடுமாறு இக்குழுவினா் சித்தராமையாவை கேட்டுக் கொண்டனா். இதற்காக நன்றி தெரிவித்த சித்தராமையா, தனது சொந்த சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்திருந்தாலும், பாதாமி தொகுதி மக்கள் தனக்கு ஆதரவாக இருந்ததை நன்றியோடு நினைவு கூா்ந்தாா். ஆனால், பாதாமிக்கு சென்று வருவது கடினமாக இருப்பதை ஒப்புக்கொண்ட சித்தராமையா, கோலாரில் போட்டியிடுவது தொடா்பாக விரைவில் முடிவு செய்வதாகக் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT