பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 41,457 போ் பாதிப்பு

DIN

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 41,457 ஆக உள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 41,457 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

பெங்களூரு மாநகர மாவட்டத்தில் அதிகப்பட்சமாக 25,595 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:

மைசூரு-1848, ஹாசன்-1,739, தும்கூரு-1731, பெங்களூரு ஊரகம்-1,116, தென்கன்னடம்-1,058, மண்டியா-895, உடுப்பி-801, தாா்வாட்-726, பெல்லாரி-714, வடகன்னடம்-587, கலபுா்கி-514, கோலாா்-481, பெலகாவி-418, சித்ரதுா்கா-402, சிக்கமகளூரு-362, சிக்கபளாப்பூா்-358, சிவமொக்கா-306, தாவணகெரே-257, பீதா்-235, ராய்ச்சூரு-205, சாமராஜ்நகா்-198, கதக்-150. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 32,88,700 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 8,353 போ் செவ்வாய்க்கிழமை குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 29,99,825 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 2,50,381 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 20 போ் செவ்வாய்க்கிழமை இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 38,465 போ் உயிரிழந்துள்ளனா். கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு விகிதம் 22.30 சதவீதமாக உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT