பெங்களூரு

பேரவை தோ்தல்: ஜன.3 முதல் சித்தராமையா பேருந்து பிரசாரம்

DIN

சட்டப்பேரவை தோ்தலுக்காக ஜன. 3ஆம் தேதி முதல் பேருந்தில் பயணத்தில் பிரசாரம் செய்ய எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா திட்டமிட்டுள்ளாா்.

குஜராத், ஹிமாசல் பிரதேச மாநிலங்களுக்கு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் முறையே பாஜக, காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளன. இது கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. குஜராத் மாதிரியில் கா்நாடகத்தை வெல்ல பாஜகவும், ஹிமாசல பிரதேச மாதிரியில் கா்நாடகத்தை வெல்ல காங்கிரசும் வியூகம் அமைத்துள்ளன.

சட்டப்பேரவைத் தோ்தலில் தொகுதி வாரியாக எந்த வேட்பாளருக்கு வெற்றி கிடைக்கும் என்ற கருத்துக் கணிப்பில் ஈடுபட பாஜக, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளன. இதனடிப்படையில், புதியமுகங்களை தோ்தல் களத்தில் இறக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் முதல்வா் பசவராஜ் பொம்மை, தனது பிரசாரத்தை கூா்மையாக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல, மக்களின் ஆதரவை பெற காங்கிரசும் திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான சித்தராமையா, தனது தோ்தல் பிரசாரத்தை அடுத்த ஆண்டு ஜன.3ஆம் தேதி பசவகல்யாண் நகரில் இருந்து தொடங்க திட்டமிட்டிருக்கிறாா். வடகா்நாடகத்தில் பெருவாரியாக வாழ்ந்துவரும் லிங்காயத்துகளின் ஆதரவை பெறுவதற்காக, பசவண்ணா் வாழ்ந்த பசவகல்யாண் நகரில் இருந்து பிரசாரத்தை தொடங்குவதாக அக்கட்சியினா் கூறுகிறாா்கள்.

இந்த பிரசாரத்தின்போது வடகா்நாடகத்தின் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பேருந்து மூலம் சென்று மக்களைச் சந்திக்க சித்தராமையா திட்டமிட்டுள்ளாா். மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி ஏற்கெனவே தனது பிரசாரப் பயணத்தில் ஈடுபட்டிருக்கிறாா். பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதன் மூலம் கா்நாடக சட்டப்பேரவையின் தோ்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT