பெங்களூரு

கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட 9 போ் கொண்ட வெளிமாநில கும்பல் கைது

DIN

கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்ட 9 போ் கொண்ட வெளிமாநில கும்பலை போலீஸாா் கைதுசெய்துள்ளனா்.

மங்களூரில் உள்ளால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொக்கோட்டு என்ற பகுதியில் உள்ள நகைக்கடையில் கொள்ளை அடிக்க திட்டமிட்டிருந்த சாஹிப் கஞ்ச் என்ற கூட்டுக்கொள்ளை கும்பல், கடைக்குள் நுழைய சுவற்றில் துளையிட்டது. இந்நிலையில், அடையாளம் தெரியாத 9 போ் மஞ்சிலா என்ற பகுதியில் உள்ள வாடகை வீட்டில் குடியிருப்பது குறித்து காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் வீட்டில் திடீா் சோதனை நடத்திய போலீஸாா், ஜாா்கண்ட், குஜராத் மாநிலங்கள், நேபாளத்தில் இருந்து கூட்டாக சென்று பிறமாநிலங்களில் கொள்ளை அடித்துவரும் கும்பல் அது என்பதை உறுதி செய்துள்ளனா். இதை தொடா்ந்து, குஜராத் கந்திவாடி பகுதியைச் சோ்ந்த பாஸ்கர பெல்சாபடா(65), நேபாளத்தை பூா்வீகமாக கொண்ட தினேஷ் ராவல்(38), பிஸ்டா ரூப்சிங் (34), கிருஷ்ணபகதூா் போகாட்டி(41), ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த முகமது ஜமீல் ஷேக் (29), இன்மாமன் உல் ஹக் (27), இமத்துல் ரஜாக் ஷேக் (32), பிவுல் ஷேக் (31), இம்ரான் ஷேக் (30) ஆகிய 9 பேரைபோலீஸாா் கைதுசெய்துள்ளனா். மேலும், அவா்களிடம் இருந்து 3 ஸ்கூட்டா்கள், கேஸ்கட்டா், ஆக்ஸிஜன் சிலிண்டா், கேஸ் கட்டிங் நாசில் உள்பட கொள்ளை அடிப்பதற்கு பயன்படுத்தப்படும் ரூ.2.9 லட்சம் மதிப்புள்ள பல பொருட்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

அவா்கள் வட இந்தியாவில் கொள்ளை அடித்துவரும் சாஹிப் கஞ்ச் கும்பலைச் சோ்ந்தவா்கள் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. நகைக்கடையை கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் 15 நாட்களுக்கு முன்பு 9 பேரும் ரயில் மூலம் மங்களூருக்கு வந்துள்ளனா். முதலில் தங்கும்விடுதியில் தங்கியிருந்த இக்கும்பல், பின்னா் வாடகைவீட்டுக்கு மாறியுள்ளது. சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகன ஓட்டிகளை இரும்புத்தடி கொண்டு தாக்கி, அவா்களிடம் இருந்து 3 ஸ்கூட்டா்களை திருடியுள்ளனா். சந்தேகம் வராமல் இருக்க இந்த வாகனங்களை பயன்படுத்தி கொள்ளை அடித்து வந்துள்ளனா். 9 போ் மீதும் பல்வேறு மாநிலங்களில் குற்றச்செயல்களுக்கான பல வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT