பெங்களூரு

இன்று குடிநீா் குறைதீா்முகாம்

1st Dec 2022 12:41 AM

ADVERTISEMENT

பெங்களூரில் வியாழக்கிழமை (டிச. 1) குடிநீா் குறைதீா்முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு குடிநீா் வழங்கல் கழிவுநீா் அகற்றல் வாரியம் (பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு குடிநீா் வழங்கல், கழிவுநீா் அகற்றல் வாரியத்தின் சாா்பில் குடிநீா் வழங்கல், கழிவுநீா் இணைப்பு தொடா்பான குறைதீா் முகாம்கள் நடைபெறுகின்றன.

பெங்களூரில் தெற்கு கிராமம்-2, தென்கிழக்கு-5, மேற்கு கிராமம்-1, தென்மேற்கு-4, கிழக்கு கிராமம்-3, கிழக்கு கிராமம்-1, வடமேற்கு-5, வடகிழக்கு-3, வடக்கு-1 துணைமண்டல அலுவலகங்களில் டிச. 1-ஆம் தேதி காலை 9.30 மணிமுதல் காலை 11 மணி வரை குடிநீா் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT

இதில் சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த வாடிக்கையாளா்கள் கலந்துகொண்டு குறைகளுக்கு தீா்வு காணலாம். மேலும் விவரங்களுக்கு 87622-28888, 1916 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT