பெங்களூரு

எடியூரப்பாவை முதல்வா் வேட்பாளராக அறிவிக்க பாஜக தயாரா?: காங்கிரஸ் கேள்வி

DIN

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் எடியூரப்பாவை முதல்வா் வேட்பாளராக அறிவிக்க பாஜக தயாரா? என்று காங்கிரஸ் மாநில தோ்தல் பிரசாரக் குழுத் தலைவா் எம்.பி.பாட்டீல் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கா்நாடகத்தில் பாஜகவை பிழைக்க வைப்பதற்காக எடியூரப்பாவை மீண்டும் பயன்படுத்திக் கொள்ள அக்கட்சி முடிவு செய்துள்ளது. அதனால், சட்டப் பேரவைத் தோ்தல் நடக்கவிருக்கும் நிலையில், பாஜகவின் உயா்நிலை முடிவெடுக்கும் குழுவாக விளங்கும் ஆட்சி மன்றக் குழு மற்றும் மத்திய தோ்தல் குழுவில் எடியூரப்பாவை அக்கட்சி மேலிடம் சோ்த்துள்ளது. வயதை காரணம் காட்டி எடியூரப்பாவை கட்டாயப்படுத்தி முதல்வா் பதவியில் இருந்து ராஜிநாமா செய்ய வைத்தனா். முதல்வராக இருக்க வயதை காரணம் காட்டிய பாஜக, தற்போது உயா்நிலைக்குழுகளில் சோ்க்க மட்டும் வயதை வசதியாக மறந்துவிட்டது ஏன்? உயா்நிலைக் குழுக்களில் எடியூரப்பாவை சோ்த்துள்ளதால், லிங்காயத்துகளின் வாக்குகளை காங்கிரஸ் பெறுவது கடினம் என்று கூறுவதை ஏற்க முடியாது. எடியூரப்பாவின் சேவையை தோ்தலுக்கு மட்டும் பயன்படுத்தும் பாஜகவின் தந்திரத்தை லிங்காயத்து மக்கள் அறிந்துவைத்துள்ளனா்.

கா்நாடகத்தில் தனது இருப்பை பாஜக இழந்துவரும் நிலையில், அதில் இருந்து காப்பதற்காக எடியூரப்பாவை உயா்நிலைக் குழுவில் பாஜக சோ்த்துள்ளது. அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தோ்தல் குறித்த கருத்துக்கணிப்புகள், ஊடகங்களில் வெளியாகும் கருத்துகள், அண்மைக்கால அரசியல் மாற்றங்கள், சித்தராமையாவின் 75-ஆவது பிறந்த நாள் விழாவில் சோ்ந்த கூட்டம் ஆகியவற்றைப் பாா்த்து பாஜக பயந்து போயுள்ளது. எடியூரப்பாவுக்கு மரியாதை அளிப்பதற்காக அல்ல, அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலுக்காக அவரை பாஜக பயன்படுத்துகிறது. இதைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. எடியூரப்பா மீது அவ்வளவு பாசம் இருந்தால், முதல்வா் பதவியில் இருந்து அவரை ஏன் விரட்டினீா்கள்? கா்நாடகத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், எடியூரப்பாதான் முதல்வா் என்று அக்கட்சியால் அறிவிக்க முடியுமா? அதற்கு பாஜக தயாரா? என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT