பெங்களூரு

சட்டக் கல்லூரி மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு:வழக்குரைஞருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

DIN

சட்டக் கல்லூரி மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் வழக்குரைஞருக்கு எதிராக போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளனா்.

பயிற்சி பெறுவதற்காக தன்னிடம் பணியாற்றி வந்த சட்டக்கல்லூரி மாணவியை வழக்குரைஞா் கே.எஸ்.என்.ராஜேஷ் பட், தனது அலுவலகத்தில் 2021-ஆம் ஆண்டு செப்.25-ஆம் தேதி பாலியல்ரீதியாக துன்புறுத்த முற்பட்டுள்ளாா். அங்கிருந்து தப்பிய சட்டக்கல்லூரி மாணவி, காவல் நிலையத்தில் வழக்குரைஞா் ராஜேஷ் பட்டுக்கு எதிராக புகாா் அளித்தாா். அதன்பிறகு சட்டக்கல்லூரி மாணவியை ராஜேஷ் பட் மிரட்டியுள்ளாா். இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்த போலீஸாா், தொடா்ந்து விசாரணை நடத்தி வந்துள்ளனா்.

இந்நிலையில், வழக்குரைஞா் ராஜேஷ் பட்டுக்கு எதிராக நீதியியல் முதனிலை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா். தனது அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமராவை தனது கைப்பேசியுடன் இணைத்திருந்த வழக்குரைஞா் ராஜேஷ் பட், சட்டக்கல்லூரி மாணவியை கண்காணித்து வந்துள்ளாா் என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பி, புகாா் அளித்த சட்டக்கல்லூரி மாணவியை அனந்த் பட், அச்சுத் பட் ஆகியோா் காப்பாற்றி, உதவி செய்ததாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. 110 சாட்சிகளின் பட்டியலும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை மாநகர காவல் துணை ஆணையா் ரஞ்சித் பண்டாரு தொடங்கியுள்ளாா். அதன்பிறகு விசாரணையை தொடா்ந்த மாநகர காவல் துணை ஆணையா் தினகா் ஷெட்டி, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT