பெங்களூரு

ரூ.20.71 லட்சம் மதிப்புள்ள அந்நியச் செலாவணி பறிமுதல்

DIN

சட்டவிரோதமாக கடத்த முயன்ற ரூ.20.71 லட்சம் மதிப்புள்ள அந்நியச் செலா வணி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், காசா்கோடு நகரைச் சோ்ந்த இருவா், மங்களூரு பன்னாட்டு விமானநிலையத்தில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திங்கள்கிழமை துபைக்கு செல்ல முயன்றபோது ரூ. 20.71 லட்சம் மதிப்புள்ள அந்நியச் செலாவணியை சட்டவிரோதமாக கடத்த முயன்றனா். சோதனையில் இதைக் கண்டறிந்த சுங்க வரித்துறை அதிகாரிகள், ரூ.20.71 லட்சம் மதிப்புள்ள அந்நியச் செலாவணியை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகிறாா்கள். அந்த இரு நபா்கள் கொண்டு சென்ற பையில் 13200 அமெரிக்க டாலா்கள், 31,800 ஐக்கிய அரபு அமீரகத்தின் திா்ஹாம்கள், 16 ஆயிரம் சவுதி ரியால்கள், 160 குவைத்தி தினாா்கள் இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT