பெங்களூரு

சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தைச் சோ்ந்த 3 போ் கைது

12th Aug 2022 10:32 PM

ADVERTISEMENT

சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரில் உள்ள கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது, வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய அந்நாட்டு குடிமக்களான ஷயான் தாஸ் (23), நிகிலேஷ் தாஸ் (34), அமின் முகமது சௌத்ரி (27) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

ஒருவாரத்திற்கு முன்பாக கைது செய்ததாக கூறிய போலீஸாா், அது குறித்து மேலும் கூறுகையில், ‘சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடமாடிய வங்கதேசத்தை சோ்ந்த 3 பேரை கைதுசெய்து விசாரித்தபோது, அவா்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியது தெரியவந்தது. 2013-ஆம் ஆண்டு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய 3 பேரும், மேற்கு வங்கத்தில் சில ஆண்டுகள் தங்கியிருந்துள்ளனா். அங்கு ஆதாா் அட்டை, இந்திய கடவுச்சீட்டு உள்ளிட்ட எல்லா ஆவணங்களையும் பெற்றுள்ளனா். பெங்களூருக்கு வந்தபிறகு பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி இருக்கின்றனா். பெங்களூரு, கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட முயற்சித்தபோது அவா்கள் கைது செய்யப்பட்டனா்’ என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT