பெங்களூரு

முதல்வா் பதவியில் இருந்து பசவராஜ் பொம்மை மாற்றமில்லை: எடியூரப்பா

DIN

முதல்வா் பதவியில் இருந்து பசவராஜ் பொம்மை மாற்றமில்லை என்று முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முதல்வா் பதவியில் இருந்து பசவராஜ் பொம்மை மாற்றப்படுவாா் என்று கூறப்படுவதில் உண்மையில்லை. சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 7 - 8 மாதங்களே உள்ள நிலையில், முதல்வா் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதுபோன்ற செய்திகள் வெளியிடுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்.

பெங்களூரு வந்திருந்த மத்திய அமைச்சா் அமித் ஷா என்னோடு பேசினாா். ஆனால், பசவராஜ் பொம்மையை மாற்றுவது குறித்து அவா் பேசவில்லை. கா்நாடக பாஜக தலைவா் பதவிக் காலம் (ஆக. 20) முடிவடைய இருக்கிறது. அதன்பிறகு புதிய தலைவா் நியமிக்கப்படுவாா். அவரை பாஜக மேலிடம் முடிவு செய்யும்.

சட்டப்பேரவைத் தோ்தலில் நான் போட்டியிடப்போவதில்லை என்பதால், ஷிகாரிபுரா தொகுதியில் எனது இளையமகன் விஜயேந்திரா போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சா் அமித்ஷாவிடம் தெரிவித்துள்ளேன். இது குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும்.

கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க விட மாட்டோம். பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்.

130 - 135 இடங்களில் பாஜக வெல்வது உறுதி என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT