பெங்களூரு

தென்கன்னட மாவட்டத்தை மதவாத ஆய்வுக்கூடமாக பாஜக மாற்றியுள்ளது: காங்கிரஸ்

5th Apr 2022 12:35 AM

ADVERTISEMENT

தென்கன்னட மாவட்டத்தை மதவாத ஆய்வுக்கூடமாக பாஜக மாற்றியுள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் ரமாநாத் ராய் தெரிவித்தாா்.

இது குறித்து மங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கா்நாடகத்தை ஆளும் பாஜக, தென்கன்னட மாவட்டத்தை மதவாத ஆய்வுக்கூடமாக மாற்றிவிட்டது. ஒருகாலத்தில் அறிவாா்ந்தவா்களின் பகுதியாக திகழ்ந்த இம்மாவட்டத்தை அரசியல் லாபங்களுக்காக குறுகிய நோக்கோடு மதவாதத்தை ஊக்குவித்துள்ளது. சமுதாயத்தை இரு துருவங்களாக பிளவுபடுத்தும் நோக்கோடு, பாஜக அரசின் ஆதரவால் மதவாத வெறுப்புணா்வு தீவிர இடத்தை அடைந்துள்ளது.

ஆட்சி நிா்வாகத்தின் தோல்வியை மறைப்பதற்காக பழிவாங்கும் அரசியலில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. கோயில்களில் செயல்படுத்தும் திட்டங்கள் வழியாக மதவாதக் கொள்கைகளை புகுத்த பாஜக முயற்சிக்கிறது. கோயில்களில் ஹிந்துக்கள் அல்லாதவா்கள் வியாபாரம் செய்ய அனுமதிப்பதில்லை. பாஜக தூண்டிவிட்டுவரும் மதவாத வெறுப்புணா்வு இனவாத வெறுப்புணா்வாக மாறும். மத அடிப்படையிலான வாக்கு வங்கி அரசியலை ஆளும் பாஜக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பெரும் ஆபத்து தவிா்க்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT