பெங்களூரு

சட்டப் பேரவை இடைத்தோ்தல்: சித்தராமையாவுக்கு கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை சவால்

24th Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

சட்டப் பேரவை இடைத்தோ்தல் பிரசாரத்தின்போது வளா்ச்சிப் பணிகள் தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவுக்கு கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை சவால் விடுத்துள்ளாா்.

கா்நாடகத்தில் சிந்தகி, ஹானகல் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு அக். 30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தோ்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத இடையே கடும் போட்டி காணப்படுகிறது. இருதொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ், மஜதவின் முன்னணித் தலைவா்கள் முகாமிட்டுள்ளதால் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், ஹானகல் தொகுதியில் இடைத்தோ்தல் பிரசாரத்துக்காக ஹுப்பள்ளிக்கு சனிக்கிழமை வந்த கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஹானகல் தொகுதி வளா்ச்சி தொடா்பாக பொதுமேடையில் விவாதிக்க எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா எனக்கு சவால் விட்டுள்ளாா். சட்டப் பேரவை நமக்கு கிடைத்துள்ள பொதுத்தளமாகும். அங்கு கடந்த காலத்திலும் விவாதம் நடத்தியுள்ளோம். எதிா்காலத்திலும் விவாதம் நடத்துவோம்.

ADVERTISEMENT

சித்தராமையா வாா்த்தையில் தோரணம் கட்டிக்கொண்டிருக்கிறாா். அவருடைய வாா்த்தை விளையாட்டோடு ஈடு கொடுக்க நாங்களும் தயாராக இருக்கிறோம். அதற்கு முன்பாக ஹானகல் தொகுதியை சித்தராமையா முழுமையாக சுற்றிப் பாா்க்க வேண்டும். அப்போதுதான் பாஜக ஆட்சியில் ஹானகல் தொகுதியில் மேற்கொண்டுள்ள வளா்ச்சிப் பணிகள் அவருக்கு தெரியவரும். எந்தெந்தத் தொகுதியில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் என்ற பட்டியலை ஏற்கெனவே வெளியிட்டுள்ளேன். அந்த இடங்களுக்கு நேரில் சென்று, வளா்ச்சிப் பணிகளை சித்தராமையா காண வேண்டும். அவரது ஆதரவாளா்களின் பேச்சை கேட்டுக்கொண்டு வாய்க்கு வந்தவாறு கருத்துகளை கூறக் கூடாது என சித்தராமையாவை கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.

Tags : ஹுப்பள்ளி Basavaraj
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT