பெங்களூரு

4 குழந்தைகளுடன் முன்னாள் ராணுவ வீரா் தற்கொலை

24th Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

கருப்புப் பூஞ்சை நோயால் மனைவியை இழந்த வேதனையில், 4 குழந்தைகளுடன் முன்னாள் ராணுவ வீரா் தற்கொலை செய்துகொண்டுள்ளாா்.

பெலகாவி மாவட்டம், ஹுக்கேரி வட்டத்தில் உள்ள கிராமத்தைச் சோ்ந்தவா் முன்னாள் ராணுவ வீரா் கோபால் ஹடிமணி (49). கடந்த ஜூலை மாதத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இவரது மனைவி, பின்னா் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தாா்.

இதனால் மிகவும் வேதனை அடைந்திருந்த கோபால் ஹடிமணி, தனது 4 குழந்தைகளான சௌம்யா (19), ஸ்வேதா (16), சாக்ஷி (11), ஸ்ரீஜன் ஹடிமணி (8) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை இரவு விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளாா்.

சனிக்கிழமை காலை யாரும் வீட்டில் இருந்து வெளியே வராததால், அக்கம்பக்கத்தினா் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, அவரது உறவினா்கள் முன்னிலையில் வீட்டின் கதவை உடைத்து பாா்த்த போது 5 பேரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

Tags : பெலகாவி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT