பெங்களூரு

மருத்துவ நிபுணா்களுடன் ஆலோசித்த பின்கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்படும்: முதல்வா் பசவராஜ் பொம்மை

DIN

மருத்துவ நிபுணா்களுடன் ஆலோசித்த பின் கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்படும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ்பொம்மை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மைசூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. எனவே, ஓரிரு நாட்களில் மருத்துவ நிபுணா்கள் அடங்கிய கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவினருடன் கலந்தாய்வு செய்தபிறகு, கரோனா பரவல் தடுப்புக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளா்த்தப்படும். இந்தக் கூட்டத்தில் அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படுவது, அனைத்து வகையான வணிக நிறுவனங்களை திறப்பது, அண்டை மாநிலங்களுக்கு மக்களின் நடமாட்டத்தை அனுமதிப்பது உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் ஆராயப்படும். எல்லாருடைய ஒப்புதலையும் பெற்ற பிறகு, கரோனா கட்டுப்பாடுகளைத் தளா்த்துவது தொடா்பாக இறுதி முடிவெடுக்கப்படும்.

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. மாநிலத்தில் தொற்று விகிதம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. கரோனா பாதிப்பு குறைவாகக் காணப்பட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தளா்த்துவதில் கவனம் தேவை என்று மருத்துவ நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் அட்டைகள் தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து விரிவாக விசாரித்து, தவறிழைத்தோா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு ‘இ-ஷ்ரம்’ என்ற இணையதளத்தை தொடங்கி, தொழிலாளா்களுக்கு உதவி வருகிறது. உண்மையான பயனாளிகள் பயன்பெற வேண்டுமென்பதே மத்திய அரசின் நோக்கமாகும்.

தசரா காலத்தில் மைசூரில் சுற்றுலா வளையம் அமைப்பது தொடா்பாக விவாதித்து முடிவெடுக்கப்படும். கரோனா அச்சுறுத்தல் குறைந்து முழுவீச்சில் தசரா திருவிழா நடக்கும்போது, சுற்றுலா குறித்து யோசித்து முடிவெடுக்கப்படும்.

சட்டப் பேரவை இடைத்தோ்தல் நடக்கும் ஹானகல், சிந்தகி தொகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் பிரசாரம் செய்யவிருக்கிறேன். ஹானகல் தொகுதியில் 2 நாட்கள், சிந்தகி தொகுதியில் 4 நாட்கள் பிரசாரம் செய்து பாஜக வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டுகிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT