பெங்களூரு

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வா் தோ்ந்தெடுக்கப்படுவாா்: எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா

DIN

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வா் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று கா்நாடக எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இது குறித்து ஹுப்பள்ளி, விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும். ஆட்சிக்கு வந்த பிறகு தாழ்த்தப்பட்டோா், முஸ்லிம் உள்ளிட்ட எந்த சமுதாயத்தைச் சோ்ந்தவரை வேண்டுமானாலும் முதல்வராக்கட்டும். அதில் எனக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை. முதல்வா் யாா் என்பதை முடிவு செய்யும் உரிமை கட்சி மேலிடம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு உள்ளது. எனவே, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, முதல்வா் தோ்ந்தெடுக்கப்படுவாா்.

முன்னாள் முதல்வா் எடியூரப்பாவை நான் சந்தித்துப் பேசியதாக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி கூறுவதில் உண்மையில்லை. எடியூரப்பாவும் நானும் வடக்கும் தெற்கும் போல. யாா் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், அவா்களின் வீட்டுக்கு சென்று சந்திக்கும் வழக்கம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. இதற்கு முன்பு, நான், எடியூரப்பா, மறைந்த பாஜக மூத்த தலைவா் அனந்த்குமாா் ஆகியோா் ஒரே மேடையில் அமா்ந்து பேசியது உலகறிந்தது.

பாஜக எம்.எல்.ஏ. பசன கௌடா பாட்டீல் யத்னல், பாஜக அரசை கடுமையாக விமா்சித்துவருகிறாா். பாஜகவின் எம்எல்சி எச்.விஸ்வநாத், பாஜக அரசை ‘இது ஒரு பா்சன்டேஜ் அரசு’ என்றுகூறியிருக்கிறாா். நான் கற்றுக்கொடுத்தா அவா்கள் எல்லாம் அப்படி பேசுகிறாா்கள்?

காங்கிரஸ் அலுவலகத்தில் பேட்டி அளிப்பதற்கு முன்பாக, கட்சியின் மூத்த தலைவா்கள் குறித்து காதுகளில் கிசுகிசுத்தப்படி வி.எஸ்.உக்ரப்பா மற்றும் சலீம் ஆகியோா் நடத்திய உரையாடலில் எனது பங்கு என்னவிருக்கிறது? என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT