பெங்களூரு

பெங்களூருவில் மீண்டும் அதிபயங்கர சப்தம்

26th Nov 2021 03:55 PM

ADVERTISEMENT

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மீண்டும் ஒலித்த அதிபயங்கர சத்தத்தால் மக்கள் அச்சமடைந்திருக்கிறார்கள்.

பெங்களூருவின் ஹெம்மிகேபுரா, ஞானபாரதி, ராஜேஸ்வரி நகர், கஜாலிபுரா, கென்கரி போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு திடீரென வானிலிருந்து அதிபயங்கர சத்தம் கேட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

வானிலிருந்து வந்த பயங்கர சத்தத்துடன் சிறிய அளவிலான நில அதிர்வும் ஏற்பட்டதாக அப்பகுதியில் வசிக்கும் சிலர் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

முன்னதாக கடந்த 2020 மே மாதம் இதேபோல் பெங்களூருவின் கே.ஆர் புரம் , ஜெய்நகர் பகுதிகளில் ஒலித்த பயங்கர சத்தத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்த நிலையில் மீண்டும் இந்த ஒலியால் பெங்களூரு வாசிகள் பதற்றம் அடைந்திருக்கிறார்கள்.

ADVERTISEMENT

மேலும், இந்தச் சத்தத்திற்கான காரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : bengaluru
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT