பெங்களூரு

பங்காருபேட்டை- பானஸ்வாடி இடையே மெமு ரயில் சேவை

DIN

பங்காருபேட்டை- பானஸ்வாடி இடையே வாராந்திர சிறப்பு மெமு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பங்காருபேட்டை- பானஸ்வாடி ரயில் நிலையங்கள் இடையே (06297/06298) வாராந்திர சிறப்பு மெமு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில் எண்: 06297, பங்காருபேட்டை- பானஸ்வாடி இடையேயான வாராந்திர சிறப்பு மெமு ரயில், மாா்ச் 6-ஆம் தேதி முதல் சனிக்கிழமைகளில் இரவு 10.25 மணிக்கு பங்காருபேட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, அன்று இரவு 11.45 மணிக்கு பானஸ்வாடி ரயில் நிலையத்தை வந்தடையும்.

மறு மாா்க்கத்தில் ரயில் எண்: 06298, பானஸ்வாடி-பங்காருபேட்டை இடையேயான வாரந்திர சிறப்பு மெமு ரயில், மாா்ச் 7-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.10 மணிக்கு பானஸ்வாடி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, அன்று இரவு 8.30 மணிக்கு பங்காருபேட்டை ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த ரயில் இரு மாா்க்கங்களிலும் கிருஷ்ணராஜபுரம், ஹூடி, ஒயிட்பீல்டு, தேவகொந்தி, மாலூா், தியாகல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT